twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜவ்வாய் இழுத்த ஐ நிகழ்ச்சிகள்... பாடலை வெளியிடாமல் பாதியில் கிளம்பிய அர்னால்ட்!

    By Shankar
    |

    எத்தனை பெரிய மனிதர்கள்... எவ்வளவு கோடி செலவு... ஆனால் என்ன பிரயோஜனம்? சரியான திட்டமிடல் இல்லாமல், ஜெயா டிவிக்காக ஜவ்வாக இழுக்க முயன்றதில் ஐ ஆடியோ வெளியீட்டு விழாவே மகா சொதப்பலாக நடந்து முடிந்தது.

    ரஜினி என்ற ஒரு மனிதர் மட்டும் இல்லாமல் போயிருந்தால், இந்த நிகழ்ச்சி அத்தனை கேவலப்பட்டிருக்கும். அந்த மனிதரும் பொறுமையின் சிகரமாய் அமர்ந்து, ஷங்கர் மானத்தைக் காப்பாற்றிவிட்டுத்தான் போனார்.

    மாலை 3.30 முதல் 5.30-க்குள் அரங்குக்குள் வந்துவிட வேண்டும் என ஸ்கூல் பிள்ளைகளுக்குச் சொல்வது போல், நிபந்தனை விதித்திருந்தார்கள் அந்த டிக்கெட்டில்.

    காக்க வைத்தனர்

    காக்க வைத்தனர்

    5.30 மணியிலிருந்து வெறும் சப்தங்களைத்தான் இசை என்ற பெயரில் கேட்டுக் கொண்டிருந்தோம். 6 மணி தாண்டி, 6.45 மணி கடந்தது. தனக்குச் சொன்ன நேரத்துக்கு ஒரு நொடி கூட தாமதிக்காமல் சரியாக 6.45க்கு ரஜினி வந்தார். அப்படி வந்தவரை 1 மணி 17 நிமிடங்கள் காக்க வைத்தனர்.

    சித்தரைப் போல

    சித்தரைப் போல

    அவ்வப்போது ரஜினியின் பஞ்ச் வசனங்கள், அவர் படங்களின் மறக்க முடியாத பின்னணி இசைத் தொகுப்புகளைப் போட்டு அவருக்கே சீன் காட்டினர். இந்த நிகழ்ச்சியின் போக்கைப் புரிந்து, ஒரு சித்தரைப் போல சலனமின்றி அமர்ந்திருந்தார்.

    வந்தார் அர்னால்ட்

    வந்தார் அர்னால்ட்

    ஆடியோவை வெளியிட வரவழைக்கப்பட்டிருந்த அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் 7.45-க்கு வந்தார். அவர் இவர்களுக்கு ஒதுக்கியிருந்த நேரம் 100 நிமிடங்கள் கூட இல்லை. இடையில் இவர்களே ஏற்பாடு செய்த டிவி பேட்டி வேறு.

    விழாவுக்கு வந்தவர், இவர்களின் அலப்பறை மற்றும் சொதப்பலில் 'மெர்சலாகி'ப் போனார்.

    கிளம்பிட்டார்

    கிளம்பிட்டார்

    அந்த பாடி பில்டர் ஷோ முடிந்ததுமே, இதுதான் சரியான நேரம் என்று மேடைக்குப் போய் பேசத் தொடங்கினார். அதையும் ஆரம்பத்திலேயே நிறுத்தி, நீங்க அப்புறம் பேசலாம் என தொகுப்பாளர்கள் சொல்ல, விடுங்க இது என் பாணி, என்று கூறியவர், சில வரிகள் மட்டும் பேசிவிட்டு, சட்டென்று பாதியில் கிளம்பி... போயே போய் விட்டார்!

    அம்பேல்

    அம்பேல்

    அப்போதே ஏதோ அசாதரணமாய் தெரிந்தது. ஆடியோவை அர்னால்ட் வெளியிட சூப்பர் ஸ்டார் பெற்றுக் கொள்வார் என்று கூறியவர்கள், அடுத்த நொடியே, சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொள்வார் என தோசையைத் திருப்பிப் போட்டனர். விழா அம்பேல்!

    ஷங்கருக்காக

    ஷங்கருக்காக

    இந்த வெளியீட்டு சடங்கு முடிந்து மேடையிலிருந்து இறங்கும்போது, 'ஷங்கர்... முடிஞ்சிடுச்சில்ல.. நான் கிளம்பட்டா' என ரஜினி கேட்கிறார். ஷங்கரோ இன்னும் பாதி கூட முடியல.. வாங்க சார் என அழைக்கிறார். வேறு வழியின்றி நட்பை மதித்து மீண்டும் தன் இருக்கைக்குப் போய், ஏ ஆர் ரஹ்மான் இசைக்க, ஒரு அரைவேக்காட்டு தமிழ்க் குரலைக் கேட்க ஆரம்பிக்கிறார் ரஜினி!

    கடைசி வரை மணிக்கணக்கில் மீண்டும் அமர்ந்திருந்து, ஆடியோ, அவரவர் சுயதம்பட்டங்கள் மற்றும் ட்ரைலரைப் பார்த்து, வாழ்த்திப் பேசிச் சென்றவர் ரஜினி மட்டும்தான்.

    சொதப்பிய தொகுப்பாளர்கள்

    சொதப்பிய தொகுப்பாளர்கள்

    நிகழ்ச்சியைத் தொகுத்த இருவரையும் (சின்மயி, பாபி சிம்ஹா) கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் நிற்க வைக்க வேண்டும். குறைந்தபட்ச நாகரீகமோ, மரியாதையோ தெரியாதவர்கள். ஜெயா டிவிக்காக நிகழ்ச்சியை ஜவ்வாக இழுத்ததைக் கூட மன்னிக்கலாம்... ஆனால், ரஜினியிடம் போய், "தலைவா.." எனக் கூவியபடி, "விக்ரம் பத்திப் பேசுங்க" என்று கேட்க, அவர் சட்டென்று, "அதான் ஸ்டேஜில் பேசப் போறேனே.. போங்க" என்று பட்டென்று திருப்பிச் சொன்னதை என்னவென்பது!

    இது என் பாணி

    இது என் பாணி

    மிகுந்த உற்சாகத்துடன் மைக்கில் பேச ஆரம்பித்த அர்னால்டிடமிருந்து, கிட்டத்தட்ட மைக்கைப் பிடுங்கியது எத்தனை பெரிய அவமானம். அவர் கோபத்தை மறைத்தபடி, 'விடுங்க.. இது என் பாணி.. நான் பேசிவிட்டுப் போகிறேன்' என்று சொல்லிப் பேச வேண்டியதாகிவிட்டது. அதுவும் நான்கு வரிகள்தான்!

    இதானா உங்க டக்கு!

    இதானா உங்க டக்கு!

    இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் விக்ரமால் குறைந்தபட்சம் ஒரு போட்டோ கூட எடுத்துக் கொள்ள முடியவில்லை, அர்னால்டுடன்! ஆனால் ஜிம்முக்குப் போய் சூர்யா அந்த பெருமையைத் தட்டிக் கொண்டார். இதானா உங்க டக்கு!

    பாராட்டத்தக்க விஷயங்கள்

    பாராட்டத்தக்க விஷயங்கள்

    நிகழ்ச்சியில் பாராட்டும்படி அமைந்தது, அந்த ஒளி நடனம், விக்ரம் மனித மிருகமாக வேடம் போட்டு வந்து ஆடியது மற்றும் ரஜினியின் வெளிப்படையான பேச்சு!

    English summary
    The so called mega audio launch of I was totally collapsed due to the organisers unplanned manner. Due to this, Arnold Schwarzenegger has left the event in mid way.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X