twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோனி மறுத்ததால் கத்தி படத்தின் இசை உரிமையை வாங்கியது ஈராஸ் நிறுவனம்!

    By Shankar
    |

    கத்தி படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்க சோனி நிறுவனம் மறுத்துவிட்டதால், ஈராஸ் நிறுவனம் அதனை வாங்கியுள்ளது.

    கத்தியின் இன்னொரு தயாரிப்பாளரான அய்ங்கரனின் தலைமை நிறுவனம்தான் இந்த ஈராஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    Eros snapped Kaththi audio rights

    விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படமான கத்தியை, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் தயாரிப்பதால் பெரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது.

    அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை உரிமையை முதலில் வாங்குவதாக இருந்த நிறுவனம் சோனி. ஆனால் படத்துக்கு எழுந்த பிரச்சினைகளைப் பார்த்து, பின்னர் வாங்க மறுத்துவிட்டது.

    ஆனால் இசை வெளியீட்டுத் தேதி குறித்திவிட்டனர் தயாரிப்பாளர்கள். செப்டம்பர் 18-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்த பிறகும், வேறு ஆடியோ நிறுவனம் எதுவும் வாங்க முன்வரவில்லை.

    இந்த நிலையில் வேறு வழியின்றி, கத்தியின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்ங்கரனின் தொழில் கூட்டாளியான ஈராஸ் நிறுவனம் இந்த ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது.

    ஈராஸ் நிறுவனத்தின் ஈராஸ் டிஜிட்டலின் தென்னக தலைவராக ரஜினியின் மகள் சவுந்தர்யா சமீபத்தில் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Eros International has snapped up Vijay's upcoming release Kaththi's audio rights.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X