» 

லண்டனில் இருந்து சென்னைக்கு மாறிய கத்தி பட ஆடியோ வெளியீடு

Posted by:

விஜய் நடித்த கத்தி படத்தின் ஆடியோ செப்டம்பர் 18ஆம் சென்னையில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் கத்தி. விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக சமந்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

தீபாவளி பண்டிகை அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை செப்டம்பர் மாதம் லண்டனில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சர்ச்சை காரணமாக சென்னையில் ஆடியோ வெளியீடு நடைபெறுகிறது.

ஐங்கரன் மூவிஸ்

கத்தி படத்தை ஐங்கரன் பிலிம்ஸ்தான் முதலில் தயாரித்தது. ஆனால் அதையடுத்து அவர்களுக்கு சம்பளத்திற்கான செக் வழங்கியபோதுதான் அதில் லைகா நிறுவனத்தின் பெயர் இருந்ததாம்.

அதுதான் இது

அதையடுத்து ஐங்கரன் பிலிம்சிடம் கேட்டபோது, இரண்டு நிறுவனமும் ஒன்றுதான் என்றார்களாம். அதோடு, இதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி படப்பிடிப்பை தொடர வைத்திருக்கிறார்கள். இது தமிழகம் முழுவதும் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தயாரிப்பாளருக்கு எதிராக

ஒரு இனப்படுகொலையாளிக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழகத்தில் சினிமாவில் கால்பதிக்க விடக்கூடாது என்று கூறி பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. கத்தி படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

தமிழ் அமைப்புகள் போராட்டம்

சமீபத்தில் 65 அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணைந்து கத்தி படத்துக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தை அறிவித்தனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பிலிருந்து லைகா விலகிக் கொள்ளும், அதற்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் படத்தைத் தயாரிக்கும் என்று கூறப்பட்டது.

லைகா நிறுவனம்

ஆனால் சமீபத்தில் வெளியான போஸ்டரில் தயாரிப்பாளராக லைகா நிறுவனத்தின் பெயரே இவற்றில் இடம்பெற்றிருந்தது. தயாரிப்பாளர்களாக ஏ சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தியின் பெயர்கள்தான் உள்ளது.

சென்னையில் ஆடியோ

இந்த நிலையில் ஆடியோ வெளியீடு வரும் செப்டம்பர் 18ஆம் சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவை ஒளிபரப்பும் உரிமையை தமிழ் சேனல் ஒன்று பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

See next photo feature article

விஜய் சமந்தா நடனம்

இந்த விழாவில் கத்தி படத்தில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்களாம். அஞ்சான் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்த சமந்தா, கத்தி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக பங்கேற்பதாக கூறியுள்ளாராம். இந்த விழாவில் விஜய், சமந்தா, அனிருத் மூவரும் நடனம் ஆட இருக்கிறார்களாம்.

Read more about: kaththi, vijay, ar murugadass, audio launch, கத்தி, விஜய், முருகதாஸ், ஆடியோ வெளியீடு
English summary
After a lot of hide-and-seek being played for the past few months, the venue for the audio launch of Kaththi has been changed from London to Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos