» 

16 நாட்களில் எட்டுப் பாடல்கள் - கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!

Posted by:

Ilayaraja
நடுநிசி நாய்களுக்குப் பிறகு சிதைந்துபோன கவுதம் மேனன் இமேஜ், நீதானே என் பொன்வசந்தம் பட அறிவிப்பு, இளையராஜா இசை என்றெல்லாம் அறிவிப்புகள் வந்த பிறகு, கம்பீரத்துக்கு திரும்பியிருக்கிறது.

சமீபத்தில் எந்தப் படப் பாடல்களுக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பு நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு உருவாகியுள்ளது.

சரி, இளையராஜா அப்படி என்னதான் இந்தப் படத்தில் விசேஷமாக செய்திருக்கிறார்...

சமீபத்திய தனது பேட்டியொன்றில் இப்படிச் சொல்லியிருந்தார் கவுதம்:

''ஒவ்வொரு படம் தொடங்கும்போதும் 'இதுக்கு ராஜா சார்தான் மியூஸிக்'னு யோசிப்பேன். ஆனா, அமையாது. இந்தப் படத்துக்கு கண்டிப்பா அவர்கிட்ட கேட்கலாம்னு தைரியம் வந்துச்சு. அவரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கும்போதுகூட என்ன விஷயம் பேசப்போறேன்னு சொல்லவே இல்லை.

'நான் ஒரு படம் பண்றேன். ஏற்கெனவே 50 சதவிகிதம் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இதுதான் கதை. இந்த மாதிரி மியூஸிக் வேணும்'னு சொல்லி, ஷூட் பண்ணின போர்ஷனைப் போட்டுக் காட்டினேன். எல்லாத்தையும் உள்வாங்கிட்டு பிரமாதமான டியூன்கள் தந்தார். ஒரே நாள்தான்... எனக்குத் திக்குமுக்காடிடுச்சு! 'சார்... என்னால இவ்வளவு விஷயங்களையும் மனசுல ஏத்திக்க முடியலை. மீதியை நாளைக்கு வெச்சுக்கலாம்'னு சொன்னேன்.

'ஒரு விஷயம் நல்லா நடக்கும்போது பிரேக் பண்ணாதீங்க'ன்னார்.

'சார்... நீங்க கொட்றீங்க. என்னால முடியலை'னு சொல்லிச் சமாளிச்சேன். 'இளையராஜா ஒரு பாடலை உருவாக்கும்போது, நாம கூட இருக்கிறதே பெரிய கொடுப்பினை'னு என்கிட்ட ஒரு ஸ்டார் நடிகர் சொன்னார். அது நூத்துக்கு நூறு உண்மை!

'உங்க மெலடி எனக்கு வேணும். புது சவுண்ட், புது ட்ரீட்மென்ட்ல தரணும்'னு போய் நின்னேன். எல்லா பாட்டுக்கும் ஹார்மோனியத்தில் டியூன் போட்டு அதுக்கு நா.முத்துக்குமாரை வரிகள் எழுத வைச்சு, எந்த இசைக் கருவிகளின் ஒலிக்கோர்ப்பும் இல்லாம பாடவெச்சு பதிவு பண்ணோம். அந்தக் குரலை மட்டும் லண்டன் எடுத்துட்டுப் போய் ஹங்கேரியில் இருந்து வரவைச்ச சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா மூலம் பதிவு பண்ணோம்.

படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். ஒரு பாட்டுக்கு இரண்டு நாள்னு கிட்டத்தட்ட 16 நாள்ல மொத்த ஒலிப்பதிவும் முடிஞ்சிருச்சு. மூணு வாரத்துல எல்லா பாடல்களும் ஷூட்டிங்கிற்கு ரெடி. இதுவும் ஒரு புது அனுபவம்தான்!''

எட்டுப் பாட்டும் சூப்பர் ஹிட்டாகட்டும்!

Read more about: ilayaraaja, இளையராஜா, gautham menon, கவுதம் மேனன்
English summary
In a recent interview director Gautham Menon hailed Maestro Ilayaraaja's music and his style of working for his forthcoming film Neethaane En Ponvasantham.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos