» 

நீதானே என் பொன்வசந்தம் படத்துக்காக இளையராஜா பாடிய பாடல்!

Posted by:

கவுதம் மேனனின் நீதானே என் பொன்வசந்தம் படம் தினசரி செய்திகளில் இடம்பெறும் அளவுக்கு பாப்புலராகிவிட்டது.

முதல்முறையாக கவுதம் மேனனும் - இளையராஜாவும் கைகோர்த்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு எக்கச்சக்கமாகிவிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் படம் இது. மூன்றிலும் ராஜாதான் இசை.

இந்நிலையில் பாடல்கள் குறித்து கெளதம் மேனன் கூறுகையில், "'நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் இளையராஜா, யுவன், கார்த்திக் (பாடகர்) பாடியுள்ளார்கள். அதைப் பார்ப்பதே பெரும் ஆனந்தமாக இருந்தது. நேற்று இளையராஜா தன் குரலில் ஒரு பாடல் பதிவு செய்தார், " என்றார்.

வழக்கம்போல இந்தப் படத்தின் பாடல்களையும் ஹங்கேரியில் வைத்து பதிவு செய்கிறார் இளையராஜா.

Read more about: ilayaraja, tamil cinema, இளையராஜா
English summary
Ilayaraja has rendered a song in his voice for Goutham Menon's Neethane En Ponvasantham recently.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos