Don't Miss!
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- News தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிகரம் தொடு.. இசை வெளியீட்டு மேடையில் ஜேசுதாஸ் பாடிய 'அப்பா' பாடல்!
சென்னை: இன்று நடந்த சிகரம் தொடு இசை வெளியீட்டு விழா மேடையில், அன்புள்ள அப்பா என்ற பாடலை என்ற பாடலைப் பாடி நெகிழ வைத்தார் கேஜே ஜேசுதாஸ்.
கும்கி', 'இவன் வேற மாதிரி', 'அரிமா நம்பி' படங்களுக்குப் பிறகு, விக்ரம் பிரபு நடிக்கும் படம் சிகரம் தொடு. மோனல் காஜர் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை 'தூங்கா நகரம்' கௌரவ் இயக்கி வருகிறார்.
இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இன்று காலை சத்யம் வளாகத்தில் வெளியிட்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கமல் ஹாசன், கே.ஜே.யேசுதாஸ், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.
இப்படத்தின் பாடல்களை கமல் ஹாசன் வெளியிட அதை கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். படத்தின் டிரைலரை தனுஷ் மற்றும் யேசுதாஸ் வெளியிட்டனர்.
விழாவில் சிறப்பு அம்சமாக இமான் இசையில் இப்படத்தில் தான் பாடிய 'அன்புள்ள அப்பா...' என்ற பாடலை மேடையில் பாடினார் ஜேசுதாஸ். அப்பா - மகன் உறவைச் சொல்லும் இந்தப் பாடல் கேட்பவை நெகிழ வைத்தது.