»   »  "பாட்டி ராசாத்தி".... ஜோதிகாவின் "வாடீ ராசாத்தி" இப்போது கிராமிய இசை வடிவில்!

"பாட்டி ராசாத்தி".... ஜோதிகாவின் "வாடீ ராசாத்தி" இப்போது கிராமிய இசை வடிவில்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 36 வயதினிலே படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாடீ ராசாத்தி' பாடல் கிராமிய இசை வடிவில் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா, 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ளார்.


மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘36 வயதினிலே'. மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவே தமிழிலும் இயக்குகிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.


வாடீ ராசாத்தி...

இப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது. முன்னதாக இப்படம் கடந்த வாரம் ரிலீசாக இருந்தது. ஆனால், இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘வாடீ ராசாத்தி' பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அப்பாடலுக்கான படப்பிடிப்பு மீண்டும் நடத்தப்பட்டது. அதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதாகக் கூறப்பட்டது.


பெரும் வரவேற்பு...

ஆரம்பத்தில் ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து ‘வாடீ ராசாத்தி' பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பாடலின் வரிகள் மற்றும் இசையால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது இப்பாடல்.


கிராமிய இசையில்...

எனவே, இப்பாடலை முறையாகப் படமாக்க திட்டமிட்டதாம் படக்குழு. அதன்படி, தற்போது கிராமிய இசையில் அப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது.


திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா...

பாடல் காட்சிகளில் பாட்டிகள் அசத்தல் நடனமாட, ‘ராசாத்தி'க்கு அனைவரும் திருஷ்டி சுத்திப் போடுகின்றனர். பாடலின் ஆரம்பத்திலும், இறுதியிலும் ஜோதிகா பேசுவது போல் சில டயலாக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன.


English summary
36 Vayadhinile is the comeback of Jyothika after a gap of eight years and it is one of the most awaited movies of 2015. With the trailer, Jyothika has managed to go beyond the expectations of her fans
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos