Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஐ'-யை முந்தியது 'கத்தி': அனிருத்தின் 6-வது படமும் ஐ-டியூன்ஸில் டாப்!
இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது அதைப்போலவே கத்தி இசையும் முதலிடம் பிடித்துள்ளது.
'3' திரைப்படம் மூலம் அறிமுகமான அனிருத், அத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யூடியூபில் ஹிட் ஆனதால், உலகளவில் பிரபலமானார்.
தொடர்ந்து எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி அகிய திரைப்படங்களில் அனிருத் இசை ஹிட் ஆனது.
கத்தி படத்தில் அனிருத்
விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 'கத்தி' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே பாடல்கள் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
செல்ஃபி புள்ள
சில நாட்களுக்கு முன், 'கத்தி' திரைப்படத்தில் இடம்பெறும் 'லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள' பாடல் லீக் ஆனது ( ஆக்கப்பட்டது) அந்தப் பாடல் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்றது.
கத்தி ஆடியோ வெளியீடு
நேற்று கத்தி திரைப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான சில மணி நேரங்களிலேயே, பாடல்களை முறையாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள உலகளவில் பலர் பயன்படுத்து ஐ-டியூன்ஸ் இணையதளத்தில், கத்தி பாடல்கள், இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தன.
6 வது முறையாக
இதற்கு முன் அனிருத் இசையமைத்த 5 திரைப்பட பாடல்களுமே ஐ-டியூன்ஸ் தளத்தில், வெளியான அன்று முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
நன்றி சொன்ன அனிருத்
ரசிகர்களுக்கும், கத்தி வாய்ப்பிற்காக ஏ.ஆர். முருகதாஸுக்கும், நடிகர் விஜய்க்கும் தனது ட்விட்டர் பக்கத்தில், அனிருத் நன்றி தெரிவித்துள்ளார்.
2 வது போன ஏ.ஆர் ரகுமான்
சில நாட்களுக்கு முன் வெளியான ஏ.ஆர் ரகுமானின் 'ஐ' படப் பாடல்கள், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. பாலிவுட் படங்களான பாங் பாங், ஹேப்பி நியூ இயர் ஆகிய படங்களின் பாடல்களும் ஐ டியூன்ஸ் இணையதளத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.