twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோச்சடையான் பாடல்கள் எப்படி?

    By Shankar
    |

    பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள ரஜினியின் கோச்சடையான் பட பாடல் சிடிக்கள் பரபர விற்பனையில் உள்ளன.

    குறிப்பாக ஆன்லைன் சந்தைகளில் வேகமாக விற்றுத் தீர்ந்தவண்ணம் உள்ளன. ஆடியோ சிடி கடைகளிலும் சிடி விற்பனை பரபரப்பாக உள்ளது.

    ஆடியோ சிடி விற்பனை என்பதே சுத்தமாக இல்லாத சூழலில், கோச்சடையான் இசை மீண்டும் மார்க்கெட்டை சூடுபிடிக்க வைத்துள்ளது.

    சரி, படத்தின் பாடல்கள் எப்படி... ரசிகர்களைத் திருப்திப்படுத்தியுள்ளனவா?

    இதோ பாடல்கள் கேட்ட சிலரின் கருத்துகள்...

    கார்த்திக் (சென்னை)

    கார்த்திக் (சென்னை)

    ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் முதலில் ஒலிக்க விட்டபோது எனக்கு எந்தப் பாடலும் பிடிக்கல. ஆனா வீட்டுக்குப் போய் கேட்ட பிறகு பாடல்கள் பிடிக்க ஆரம்பிச்சது. தலைவர் குரல் ஒலிக்கும் அந்தப் பாடல்தான் கீதை மாதிரி இருந்தது. லதா ரஜினி பாடிய மணப்பெண் சபதம் மனசை உருக்கியது.

    ரஜினி குமார் (வேலூர்)

    ரஜினி குமார் (வேலூர்)

    நான் பல முறை கேட்டு ரசித்த இசை - பாடல்கள் கோச்சடையான்தான். எனக்கு முதல் முறையாக எங்கே போகுதோ வானம் பாடலைக் கேட்டபோதே பிடித்துவிட்டது. சிடி வெளியான பிறகு எனக்கு ரஜினி பாடும் மாற்றம் ஒன்றுதான் பாடல் ரொம்பப் பிடித்துவிட்டது.

    கபிலன் (தஞ்சை)

    கபிலன் (தஞ்சை)

    எனக்கு அத்தனைப் பாடல்களும் பிடித்திருந்தன. நண்பர்களுடன் திரும்பத் திரும்ப கேட்டு ரசித்தேன். இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக ஏ ஆர் ரஹ்மானின் கர்ம வீரன் பாடலும், லதா பாடிய மணப்பெண் சபதமும்.

    கணேஷ் (சோளிங்கர்)

    கணேஷ் (சோளிங்கர்)

    எனக்கு முதல் முறை கேட்டபோது, என்னடா இப்படி ஆகிடுச்சேன்னுதான் தோணுச்சி... ஆனால் திரும்பத் திரும்ப கேட்டபோது, ரஜினி சார் குரல் ஒலிக்கும் பாடலும், லதா பாடும் பாடலும் மிகவும் பிடித்துப் போய்விட்டது.

    கண்ணன் (சேலம்)

    கண்ணன் (சேலம்)

    நான் எதிர்ப்பார்த்த மாதிரி இந்தப் பாடல்கள் இல்லை. இன்னும் மாஸாக இருந்திருக்க வேண்டும். ரஜினி பாடும் பாடலும், ஏ ஆர் ரஹ்மான் பாடலும் கேட்கலாம். வாலி எழுதிய பாடலை இன்னும் நல்ல ட்யூனில் தந்திருக்கலாம். எல்லாமே மெலடியாகத்தான் உள்ளன. ஆனால் சுவையாக இல்லை.

    ரஜினி மனோஜ் (சென்னை)

    ரஜினி மனோஜ் (சென்னை)

    கர்ம வீரன் பாடலை முதல் முறை கேட்டபோதே பிடித்துப் போய்விட்டது. ரஜினி குரல் கேட்கத்தான் ஆர்வத்துடனிருந்தேன். அந்தப் பாடல் ஒரு மாஸ்டர் பீஸ். குத்துப் பாட்டு, கானா பாட்டு என கேட்டு சலித்துப் போன காதுகளுக்கு கோச்சடையான் ஆல்பம் ரியல் ட்ரீட்.

    ஏ ஆர் முருகதாஸ் (இயக்குநர்)

    ஏ ஆர் முருகதாஸ் (இயக்குநர்)

    கோச்சடையான் பாடல்களைக் கேட்டபிறகு இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் போட்டிருக்கும் கமெண்ட் இது:

    'கோச்சடையான்.... அந்த வாய்ஸ் போதும் தலைவா சும்மா ஜிவ்வுனு இருக்கு...'

    சிம்பு (நடிகர்):

    சிம்பு (நடிகர்):

    கோச்சடையான் பட ட்ரைலர் மற்றும் பாடல்கள் குறித்து நடிகர் சிம்பு, "தலைவர் திரும்ப வந்துட்டார்... லதா மேடம் பாட்டு அருமை. சிறப்பாகப் பாடியுள்ளார்," என்று தெரிவித்துள்ளார் தனது ட்விட்டரில்.

    அர்ச்சனா கல்பாத்தி (தயாரிப்பாளர்)

    அர்ச்சனா கல்பாத்தி (தயாரிப்பாளர்)

    தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில், "கோச்சடையான் இசைத் தொகுப்பு மிகச் சிறப்பாக வந்துள்ளது. கிரேட் ஆல்பம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Here are some comments on Rajini - Rahman's Kochadaiiyaan album.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X