» 

ராஜா ராணி இசை வெளியீடு... ஆர்யாவின் 'மனைவியைத்தான்' காணோம்!

Posted by:

சென்னை: புதுப்புது டெக்னிக்குகளில் விளம்பரம் செய்யப்பட்டு வரும் ராஜா ராணி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது.

ஆனால் விழாவில் கவனிக்கத்தக்க ஆப்சென்ட் படத்துக்காக ஆர்யாவின் மனைவியாக்கப்பட்ட நயன்தாராதான்!

ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லீ இயக்குநராக அறிமுகமாகும் படம் ராஜா ராணி.

ஃபாக்ஸ் ஸ்டார்

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் ஏஆர் முருகதாஸும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்யா - நயன்தாரா மற்றும் ஜெய் - நஸ்ரியா நஸீம் நடித்துள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக இந்தப் படத்துக்காக வித விதமாக விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.

ஆர்யா - நயன்தாரா திருமணம்

ஆர்யாவும் நயன்தாராவும் காதலிப்பதாகவும், இருவரும் சர்ச்சில் வைத்து திருமணம் செய்து கொண்டனர் என்றும், இதோ அவர்களின் திருமண ஆல்பம் என்றும் படக்குழுவினரே கிளப்பி விட்டனர்.

சினிமா செய்தி இருந்தால் போதும் என்று காத்திருந்த மீடியாவுக்கும், அதைத் திட்டுவது போல பாவனை செய்தபடி ரசித்துப் படிக்கும் வாசகர்களுக்கும் போதிய தீனியாக அமைந்தன இந்த செய்திகள்!

 

 

இசைவெளியீடு

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை சென்னை சத்யம் அரங்கில் நடந்தது. ஆர்யா, ஜெய், ஏ ஆர் முருகதாஸ், சத்யராஜ், ஜீவா, ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அட்லீ என ஆண்கள் மயம்.

எங்கேப்பா நயன்தாரா?

படத்தின் நாயகியான நயன்தாரா கடைசி வரை மேடைக்கே வரவில்லை. விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர் விழாவுக்கே வரவில்லை என்பது. மற்றொரு நாயகியான நஸ்ரியாவும் நயன் வழியையே கடைப்பிடித்திருந்தார்.

See next photo feature article

நயன் பற்றி வாய் திறக்காத ஆர்யா

நயனைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் (படத்துக்காகத்தாங்க) ஆர்யாவோ கடைசி வரை நயன்தாரா பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவே இல்லை!

Read more about: nayanthara, raja rani, audio launch, நயன்தாரா, ராஜா ராணி
English summary
Raja Rani, the biggest family entertainer and the most eagerly awaited movie of the year released its audio today at Sathyam Theatre.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos