» 

பிரபு தேவாவின் இசை ஆல்பம் தலைப்பு 'போருடா'!

Posted by:

தன் சொந்த வாழ்க்கையின் இன்றைய சூழலை அப்படியே பிரதிபலிப்பதாக நினைத்தோ என்னமோ, பிரபு தேவா தனது இசை வீடியோ ஆல்பத்துக்கு 'போருடா' என்று தலைப்பு வைத்துள்ளார்.

வரும் காதலர் தினத்தன்று இந்த இசை வீடியோ ஆல்பத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தார் பிரபுதேவா. ஆனால், வியாபாரம் கருதி, இதனை வேறு ஒரு தேதியில் பெரிதாக வெளியிடுமாறு நண்பர்கள் ஆலோசனை தந்ததால், வேறு தேதிக்கு மாற்றியுள்ளார்.

சமீபத்தில் இவரளவுக்கு சர்ச்சைகளில் சிக்கியவர்கள் இல்லை. முதல் மனைவி ரம்லத், அடுத்து திருமணம் செய்யவிருந்த நயன்தாரா பற்றியெல்லாம் தினமும் செய்திகள். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தனது ஆல்பம் வேலையை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆல்பத்துக்கு நீண்ட நாட்களாக பெயர் சூட்டாமலேயே இருந்தார் பிரபு தேவா. இப்போது 'போருடா' (It is boring) என்று பெயர் சூட்டியுள்ளார்.

Read more about: prabhu deva, பிரபு தேவா, tamil cinema
English summary
Prabhu Deva has revealed that he has chosen a catchy title Boruda (It’s boring) for his new music album.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos