twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிசம்பரில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்க வரும் ரஜினி, கமல், அஜீத், விஜய் பட பாடல்கள்

    By Siva
    |

    சென்னை: அடுத்த மாதம் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜீத் மற்றும் விஜய் ஆகியோரின் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் நடைபெறுகின்றன.

    பொங்கலுக்கு அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. பொங்கலுக்கு வருவதாக இருந்த ரஜினியின் கோச்சடையானின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

    இந்நிலையில் ஜனவரி மாதம் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படம் ரிலீஸ் ஆகிறது. இந்த 4 படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

    கோச்சடையான்

    கோச்சடையான்

    கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    ஜில்லா

    ஜில்லா

    டிசம்பர் 15ம் தேதி விஜய்யின் ஜில்லா பட இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். படத்தில் இளைய தளபதி விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை பாடியுள்ளார்.

    வீரம்

    வீரம்

    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளியாகும் வீரம் படத்தின் இசை டிசம்பர் 18ம் தேதி வெளியிடப்படுகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    விஸ்வரூபம் 2

    விஸ்வரூபம் 2

    கமல் ஹாஸன் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் இசை டிசம்பர் 26ம் தேதி வெளியிடப்படுகிறது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் ஜனவரி இறுதி வாரத்தில் ரிலீஸாகிறது.

    English summary
    This december will be a memorable month for the fans as Kochadaiyaan, Vishwaroopam 2, Veeram and Jilla audio will be released.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X