twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் பாட யேசுதாஸ்தான் காரணம்: கமல்

    By Mayura Akilan
    |

    எனது படங்களில் நான் பாடல்களைப் பாடுவதற்கு காரணம் யேசுதாஸ் தான் என்று 'சிகரம் தொடு' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் கூறினார்.

    விக்ரம் பிரபு, மோனல் காஜர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்ப்பில் தயாராகி இருக்கும் படம் 'சிகரம் தொடு', இப்படத்தை 'தூங்காநகரம்' படத்தின் இயக்குநர் கௌரவ் இயக்கி இருக்கிறார்.

    இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

    கமல் வெளியிட்ட கேசட்

    கமல் வெளியிட்ட கேசட்

    இப்படத்தின் இசையினை கமல் வெளியிட கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். கமல் ஆடியோ கேசட் வெளியிட்டால் அந்தப் படம் சக்சஸ் என்பது கோலிவுட் சென்டிமென்ட்.

    தனுஷ் - யேசுதாஸ்

    தனுஷ் - யேசுதாஸ்

    படத்தின் ட்ரெய்லரை தனுஷ் வெளியிட யேசுதாஸ் பெற்றுக் கொண்டார்.

    சிவகார்த்திக்கேயன் - விஜய்சேதுபதி

    சிவகார்த்திக்கேயன் - விஜய்சேதுபதி

    சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குநர் லிங்குசாமி, பிரபுசாலமன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

    சிவாஜியின் ஆசிர்வாதம்

    சிவாஜியின் ஆசிர்வாதம்

    ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல், "என்னை விடவும் பிரபுவை விடவும் அதிகமாக சிவாஜி கணேசன் மடியில் தவழ்ந்த பிள்ளை விக்ரம் பிரபு. முயற்சி தான் திருவினையாக்கும், அவர், அவரது முழு உழைப்பினால் தான் இன்று இந்தளவிற்கு வளர்ந்துள்ளார். அதற்கு சிவாஜியின் ஆசிர்வாதம் உள்ளது.

    ஒரே வீடுதான்

    ஒரே வீடுதான்

    நாங்கள் வெவ்வேறு வீடுகளிலிருந்து வந்தாலும் ‘அன்னை இல்லம்' எங்கள் எல்லோருக்கும் ஒரே வீடு தான். இப்படம் வெற்றியடைவது விக்ரம் பிரபுவிற்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல் எனக்கும் முக்கியம்.

    வெண்கலக்குரல்

    வெண்கலக்குரல்

    யேசுதாஸ் அவர்களின் குரல் அன்றைக்கு எந்தளவிற்கு இனிமையாய் இருந்ததோ இன்றும் அதேபோல இனிமையாய் உள்ளது. வெண்கலத்தை உருக்கி உருக்கி பாடிய மாதிரி உள்ளது உங்களது குரல் யேசுதாஸ் அண்ணா. உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    நான் பாட காரணம்

    நான் பாட காரணம்

    நான் பாடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் யேசுதாஸ் அண்ணா தான். உன் குரல் நன்றாக இருக்கிறது என்று என்னிடம் கூறினார். பிறகு தனியாகச் சென்று 'நம்பிட்டான்' என்று சிரித்திருப்பார். அன்று அவர் சொன்னதால் தொடர்ச்சியாக பாடி வருகிறேன்" என்றார்.

    சத்யராஜ் – விஜய்

    சத்யராஜ் – விஜய்

    ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஏ.எல்.விஜய், ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

    ஏடிஎம் திருடர்கள்

    ஏடிஎம் திருடர்கள்

    இப்படத்தின் இயக்குனர் கௌரவ் கூறும்போது, எல்லோருடைய வீட்டிலும் பால் கார்டு, ரேஷன் கார்டு மாதிரி ஏ.டி.எம் கார்டும் வைத்திருக்கிறார்கள். உங்களுடைய ஏடிஎம் கார்டும், பின் நம்பரும் இருந்தா உங்க பணத்தை ஈசியா எடுத்துடலாம். அதுமாதிரி ஏகப்பட்ட பணம் திருடு போயிருக்கு. வெறும் விசிட்டிங் கார்டு மட்டுமே வச்சு 12 கோடி ரூபாயை அபேஸ் பண்ணியவரும் இருக்கிறாரு.

    8 மாத தகவல் சேகரிப்பு

    8 மாத தகவல் சேகரிப்பு

    இந்த ஏடிஎம்-னால் நமக்கெல்லாம் என்னென்ன நன்மை உண்டு, தீமை உண்டு என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். இதை தடுக்க போலீஸ் அதிகாரிகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறோம். ஏடிஎம் சம்பந்தமான தகவல்களை திரட்டுவதற்காக சுமார் 8 மாத காலம் செலவு பண்ணியிருக்கிறோம்.

    விக்ரம் பிரபு போலீஸ்

    விக்ரம் பிரபு போலீஸ்

    இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. முதல் பாதியில் ஒரு கெட்டப்பிலும், பிற்பாதியில் வேறுவிதமான கெட்டப்பிலும் மாறி, மாறி நடித்து அசத்தியிருக்கிறார்.

    2 மாத ட்ரெயினிங்

    2 மாத ட்ரெயினிங்

    போலீஸ் அதிகாரியாக முழுமையான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக 2 மாத காலம் அவகாசம் எடுத்து, போலீஸ் அதிகாரி மாதிரியான ஹேர் ஸ்டைல், உடலமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று டிரெயினிங் எடுத்து நடித்துள்ளார்.

    அப்பாவான சத்யராஜ்

    அப்பாவான சத்யராஜ்

    சத்யராஜ், விக்ரம் பிரபுவுக்கு அப்பாவாக நடிக்கிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் உண்டான உறவையும் இதில் அழகாக எடுத்து சொல்லியிருக்கிறோம். அப்பாவுக்கென்று ஒரு பாடலையும் இதில் வைத்திருக்கிறோம். அப்பாடலை யேசுதாஸ் பாடியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு யேசுதாஸ் தமிழில் பாடும் பாடல் இதுதான். இப்பாடல் எல்லோரையும் கவரும்.

    காமெடியில் விக்ரம் பிரபு

    காமெடியில் விக்ரம் பிரபு

    இப்படத்தில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார் விக்ரம் பிரபு. ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்குண்டான அத்தனை அம்சங்களையும் இப்படத்தில் விக்ரம் பிரபு பண்ணியிருக்கிறார் என்று கூறினார்.

    English summary
    Vikram Prabhu's Sigaram Thodu audio has been launched in Chennai. While Kamal Hassan unveiled the music album, Dhanush released the trailer of the forthcoming Tamil film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X