»   »  கடும் போட்டிக்கிடையே கபாலி இசை வெளியீட்டு உரிமையைப் பெற்றது திங்க் மியூசிக்!

கடும் போட்டிக்கிடையே கபாலி இசை வெளியீட்டு உரிமையைப் பெற்றது திங்க் மியூசிக்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் கபாலி படத்தின் இசை உரிமையை பெரும் போட்டிக்கிடையில் கைப்பற்றியுள்ளது சத்யம் சினிமாஸின் திங்க் மியூசிக் நிறுவனம்.

Select City
Buy Kabali (U) Tickets

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள கபாலி பாடல்கள் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர் ரசிகர்கள். கபாலி டீசருக்கு சந்தோஷ் நாராயணன் போட்டிருக்கும் ஒரு நிமிட பின்னணி இசையையே பல ஆயிரம் பேர் தங்களின் மொபைல் ரிங் டோனாக வைத்துள்ளனர்.


Think Music snaps Kabali audio rights amidst tough competition

படத்தின் பாடல்கள் புதுமாதிரியாக இருக்கும் என்பதால், இசை வெளியீட்டு உரிமையைப் பெற பல நிறுவனங்கள் போட்டி போட்டன. இதில் சத்யம் சினிமாஸின் திங்க் மியூசிக் நிறுவனம் வெற்றிகரமாக கபாலியைக் கைப்பற்றியுள்ளது.


ஏற்கெனவே தாணுவின் கணிதன், தெறி படங்களின் இசையை இந்த நிறுவனம்தான் வெளியிட்டது. ரஜினியின் எந்திரன் பட இசையையும் திங்க் மியூசிக்தான் வெளியிட்டது. இப்போது இரண்டாவது முறையாக ரஜினி பட இசை உரிமையைப் பெற்றுள்ளது.

English summary
Think Music India has snapped the audio rights of Rajinikanth’s Kabali for a whopping price.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos