»   »  ஆட்டக்களரி, கமல் - பூஜா குமார் பாட்டு... உத்தம வில்லன் இசை வெளியீட்டுக்கு தீவிர ஒத்திகை!

ஆட்டக்களரி, கமல் - பூஜா குமார் பாட்டு... உத்தம வில்லன் இசை வெளியீட்டுக்கு தீவிர ஒத்திகை!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் மார்ச் 1-ம் தேதியன்று நடக்கவிருக்கும் உத்தமவில்லன் இசை வெளியீட்டு விழாவுக்காக இப்போதிலிருந்தே தீவிர ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர்.

கமல் ஹாஸன் நடிக்கும் உத்தம வில்லன் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.


இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

அதற்கு முன் வரும் மார்ச் 1-ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கிறது.


சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடக்கும் இந்த விழாவில், தமிழ் திரையுலக முக்கிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.ஆட்டக்களரி

ஆட்டக்களரி

இதில் ஆட்டக்களரி என்ற கேரள கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. படத்தில் கமல் ஹாஸன் கேரள தெய்யாட்டக் கலைஞராக நடித்திருப்பதால், தமிழ் ரசிகர்களுக்கு அந்த நாட்டியம் அரங்கேற்றப்படுகிறது.


கமல் - பூஜா -ஆன்ட்ரியா

கமல் - பூஜா -ஆன்ட்ரியா

மேலும் கமல் ஹாஸனும் நடிகை பூஜா குமார் மேடையில் தோன்றி படத்தின் பாடல்களைப் பாடவிருக்கிறார்கள். இவர்களுடன் படத்தின் இன்னொரு நாயகியான ஆன்ட்ரியாவும் பங்கேற்றுப் பாடவிருக்கிறார்.


ஏப்ரல் 2 ரிலீஸ்

ஏப்ரல் 2 ரிலீஸ்

படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தைத் தயாரித்துள்ளது. ஈராஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடவிருக்கிறது.


ஏப்ரல் 2-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது உத்தம வில்லன்.English summary
The audio launch of Kamal Haasan’s Uttama Villain is touted to be one of the grandest event in Kollywood to be held on March 1 at the Chennai trade center.
Please Wait while comments are loading...