twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிசம்பர் 20-ம் தேதி அஜீத்தின் வீரம் பட இசை வெளியீடு

    By Shankar
    |

    சென்னை: அஜீத்தின் பொங்கல் ஸ்பெஷலான வீரம் படத்தின் இசை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது.

    அஜீத் குமார் நடிக்க விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிக்க சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட படம் வீரம்.

    தேவி ஸ்ரீ பிரசாத்

    தேவி ஸ்ரீ பிரசாத்

    தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். அட்டகாசமான ஆறு பாடங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது.

    ஜங்க்ளீ

    ஜங்க்ளீ

    டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் ஜுங்கலீ மியூசிக் நிறுவனம், படத்தின் இசையை வெளியிட உள்ளது.

    நட்சத்திரப் பட்டாளம்

    நட்சத்திரப் பட்டாளம்

    அஜீத் குமாருடன் தமன்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் அவருடன் நாசர்,அதுல் குல்கர்னி, ரமேஷ் கண்ணா, விதார்த், பாலா, சந்தானம் , முனீஸ் , சுஹைல் ,தம்பி ராமையா, அப்பு குட்டி , மயில் சாமி, சுமித்ரா, சுஜாதா, ரோஹினி அட்டங்காடி , அபிநயா, மனோ சித்ரா, சூசாகுமார், தேவதர்ஷினி ,வித்யு லேகா, என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது .

    மாஸ் பாடல்கள்

    மாஸ் பாடல்கள்

    "அஜீத் ரசிகர்களை கவரும் வண்ணம் ' மாஸ்' பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் வழங்கி உள்ளார். அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்," என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்தார். ' வீரம் ' படம், பாடல்களில் மட்டுமின்றி, கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக , ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் அவர் கூறுனார் .

    ஜனவரி 10

    ஜனவரி 10

    வெற்றியின் ஒளிப்பதிவில், மிலனின் கலை வண்ணத்தில், காசி விஸ்வநாதனின் பட தொகுப்பில், செல்வாவின் சண்டை காட்சி அமைப்பில், தினேஷ் நடனம்
    அமைக்க, விவேகா பாடல்களை எழுதியுள்ளார்.

    ஜனவரி 10ஆம் தேதி உலகெங்கும் வெளி வருகிறது வீரம்.

    English summary
    Ajith's Veeram movie audio launch will be held on Dec 20.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X