»   »  இந்த அரையாண்டில் வெளிவந்த 100 படங்களில் வென்றவை எத்தனை தெரியுமா?

இந்த அரையாண்டில் வெளிவந்த 100 படங்களில் வென்றவை எத்தனை தெரியுமா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 ஆண்டைக் கடந்த இந்திய சினிமாவில் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெறும் 6 மாதங்களிலேயே 100 படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கின்றனர் தமிழ் சினிமா உலகினர்.

இந்த வாரம் வெளியான எலி படம் தமிழ்த் திரையுலகின் 100 வது படமாக அமைந்து உள்ளது. இதில் எந்தப் படமுமே 100 நாட்களைத் தாண்டவில்லை என்பது கசப்பான ஒரு உண்மையாகும்.

கடந்த வருடத்தில் ஹிட் கொடுத்த எந்தப் பெரிய நடிகரும் இந்த வருட ஹிட் பட வரிசையில் இல்லை என்பது உண்மையாக இருக்கும் வேளையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அறிமுக மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் நல்ல வசூலைப் பெற்று உள்ளன.

இதுவரை வெளியான படங்களில் ஹிட் கொடுத்த படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

ஐ என்னும் அளவிற்கு ஓடவில்லை

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் விக்ரமின் கூட்டணியில் சுமார் 100 கோடி செலவில் உருவான படம் ஐ. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் பெரிய லாபத்தைத் தரவில்லை என்றாலும், நஷ்டம் எதுவும் அளிக்காததால் வெற்றிப் படங்களின் வரிசையில் இணைந்துள்ளது ஐ.

பேய்ப்படங்களின் டார்லிங்

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் வெளிவந்த பேய்ப்படம் டார்லிங். யாருமே எதிர்பாராத வகையில் தியேட்டர்காரர்களுக்கும், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் லாபகரமான படமாக மாறியதில் இன்று நடிப்பில் தொடர்ந்து பிஸியாக வலம்வருகிறார் ஜி.வி.

அரைத்த மாவையே மீண்டும் அரைத்த என்னை அறிந்தால்

இயக்குநர் கௌதம்மேனன் மற்றும் தல அஜித் கூட்டணியில் உருவான என்னை அறிந்தால் படம் கௌதம்மேனன் படங்களின் தொகுப்பாக அமைந்தாலும், ரசிகர்களை ரசிக்க வைத்ததில் வெற்றிப்படமாக மாறியது.

கதறவைத்த காக்கிசட்டை

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த காக்கிசட்டை படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறாவிட்டாலும், ஓரளவு ஓடியதில் லாபமான படங்களின் வரிசையில் சேர்ந்து விட்டது.

கோட்டையைக் கட்டிய கொம்பன்

மீண்டும் கிராமத்து வேடத்தில் கொம்பன் படத்தில் நடித்த கார்த்திக்கு கொம்பன் மாபெரும் வெற்றியை அளித்து மீண்டும் கார்த்தியை வசூல் நாயகனாக மாற்றியது.

பேய் சண்டையை ரசித்த தமிழர்கள்

காஞ்சனா 2 படத்தில் பேயையும், பேயையும் அடித்துக் கொள்ள வைத்து மாபெரும் கலெக்சனை அள்ளி விட்டார் ராகவா லாரன்ஸ். 100 கோடி வசூலைத் தாண்டிய இந்தப் படம் இந்த அரையாண்டில் வெளிவந்த எல்லாப் படங்களின் வசூலையும் சேர்த்து அள்ளியது.

ஏமாற்றிய கடல் காப்பாற்றிய ஓ காதல் கண்மணி

கடல் படத்தில் இழந்ததை கண்மணி படத்தின் மூலம் மீட்டேடுத்தார் இயக்குநர் மணிரத்னம் இந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஓ காதல் கண்மணியும் சேர்ந்து கொண்டதில் மணிரத்னம் ஹேப்பி ரத்னமாக மாறிவிட்டார்.

ஹீரோ இல்லாமல் ஜெயித்த 36 வயதினிலே

நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்த ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த படம் 36 வயதினிலே. ஹீரோ இல்லாமல் வெற்றி பெற்ற படம் என்ற பெருமையை தட்டிச் சென்றது இந்தப்படம்.

ஹீரோயின் இல்லாமல் ஜெயித்த டிமாண்டி காலனி

ஹீரோயின் இல்லாமல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்ற பெருமையை தட்டிச் சென்றது டிமாண்டி காலனி. பேய்ப் படங்கள் தமிழில் தொடர்ந்து உலாவர இந்தப் படமும் ஒரு காரணமாக அமைந்தது.

இனிமே இப்படித்தான்

சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவந்த இனிமே இப்படித்தான் படம் சற்று அதிகமாக விளம்பரப் படுத்தியதில் தப்பித்து விட்டது. இனிமே இப்படித்தான் என்று இந்த வருட ஹிட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார் சந்தானம்.

பொன்முட்டையான காக்கா முட்டை

இரண்டு சிறுவர்களின் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றதுடன், வசூலிலும் தொடர்ந்து சாதனை படைத்தது வருகிறது. அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கிய இந்தப்படம் தொடர்ந்து விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று தமிழ் சினிமாவிற்கு ஒரு நம்பிக்கையை அளித்திருக்கிறது.

English summary
2015 : Tamil Cinema Released More Than 100 movies. But Very Few Movies Only Entered In The Hit List.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos