twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    36 வயதினிலே.... இந்தியப் பெண்களின் நிஜம்!

    By Manjula
    |

    சென்னை: 36 வயதினிலே படம் மிக நீண்ட... 8 வருடங்கள் கழித்து ஜோதிகா ஹீரோயினாக நடித்து வெளிவந்திருக்கும் படம்.

    தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவில் பொதுவாக எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் திருமணம் என்று வந்துவிட்டால் அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்களில் தான் நடிக்க வேண்டும் என்பது பெண்களின் தலைஎழுத்து.

    அதை உடைத்து முதலில் வந்தவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியான ஸ்ரீதேவி இங்லீஷ் விங்லிஷ் படம் மூலம் மீண்டும் ஹீரோயினாக நடித்தார்.

    மலையாள சினிமாவில் நடிகர் தீலிப்பைப் பிரிந்த பின் ஹௌஓல்ட்ஆர் யூ படம் மூலம் நடிகை மஞ்சு வாரியர் 16 வருடங்கள் கழித்து ஹீரோயினாக நடிக்க தமிழில் அந்தக் குறையைப் போக்க வந்துள்ளார் நடிகை ஜோதிகா.

    வெல்கம் ஜோதிகா

    வெல்கம் ஜோதிகா

    தமிழ்த் திரை உலகம் மீண்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறது.மொழி படத்திற்குப் ஜோதிகா மிகச் சிறப்பாக நடித்திருக்கும் படம் 36 வயதினிலே.

    கதை என்ன

    கதை என்ன

    பெண்களின் சுதந்திரம் எல்லாம் திருமணம் ஆகுவரை தான். ஆண்களின் கேள்விகள் மட்டுமே பெண்கள், விடைகள் அல்ல என்பதை மிக லேட்டாக புரிந்து கொள்ளும் ஜோதிகா தன்னை மீண்டும் மீட்டேடுப்பதே படத்தின் கதை.

    வசந்தி ராசாத்தி:

    வசந்தி ராசாத்தி:

    வசந்தி என்னும் பாத்திரத்தில் ஜோதிகா தன் கணவர் குழந்தை குடும்பம் என ஒரு சராசரி பெண்ணாக வாழ்திருக்கிறார்.

    அச்சு அசல் இந்தியப் பெண்:

    அச்சு அசல் இந்தியப் பெண்:

    கொட்டாவி விடுவது, அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, குடியரசுத் தலைவரை பார்க்க சென்ற இடத்தில மயங்கி விழுவது, குடும்பமே தன் உலகம் என நம்புவது அந்த நம்பிக்கை உடையும் போது கலங்குவது என அச்சு அசல் ஒரு இந்தியப் பெண் பாத்திரத்தை சரியாக செய்து இருக்கிறார்.

    கணவனே கண் கண்ட தெய்வம்

    கணவனே கண் கண்ட தெய்வம்

    கணவன் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும். எதிர்த்துப் பேசக் கூடாது. திருமணத்திற்குப் பின் அரசு வேலையா போகலாம், இல்லை எனில் வீட்டோடு இருந்து குடும்பத்தைக் கவனித்துக் கொள் என காலம் காலமாக பெண்களுக்கு இந்த உலகம் போதித்துக் கொண்டே இருக்கிறது என்பதை இந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    ரகுமான் வில்ல கணவன்

    ரகுமான் வில்ல கணவன்

    மனைவி மீது அக்கறை இருப்பவர் போலவே காட்டிக் கொண்டு அவரைத் தன் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் கணவனாக ரகுமான். மகள் நன்றாக வர வேண்டும் என்று அவளை மட்டும் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் ரகுமான் இங்க இருக்கிற வேலைக்காரிகளுக்கு சம்பளம் அதிகமா கொடுக்க வேண்டி இருக்கு அதனால நீ இங்க வந்துடு என்று மனைவியிடம் கேட்கும் போது தன் நடிப்பால் நமக்கும் கோபம் வர வைக்கிறார்.

    அம்மாவின் மீதான மகள்களின் பார்வை:

    அம்மாவின் மீதான மகள்களின் பார்வை:

    ஒரு வயதுக்கு மேல் பெண் குழந்தைகளுக்கு அம்மா மீதான பாசம், மரியாதை குறைந்து ஒரு அலட்சிய மனப் பான்மை வந்துவிடுவதை அமிர்தா என்ற மகள் பாத்திரத்தின் மூலம் கண் முன்னே கொண்டு காட்டுகிறார்கள். இந்தப் படத்தை பதின்வயதில் இருக்கும் பெண்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்.

    காய்கறியா பூச்சிக் கொல்லியா

    காய்கறியா பூச்சிக் கொல்லியா

    நாம் சாப்பிடும் காய்கறிகள் பூச்சிக் கொல்லிகளே என்பதை படத்தின் மூலம் தெளிவாக கூறி இருக்கிறார்கள். இயற்கைத் தோட்டம் பற்றி கூறியிருப்பது நல்ல முயற்சி. இதைப் பார்த்து மக்கள் ஆங்காங்கே மொட்டை மாடியில் காய்கறி பயிரிட ஆரம்பித்தால் நல்லது.

    சுளீர் வசனங்கள்

    சுளீர் வசனங்கள்

    நமக்குன்னு இந்த உலகத்துல ஒருத்தர் இருக்கிறாங்க என்கிற நம்பிக்கை ஒவ்வொருத்தருக்கும் இருக்கணும் , நான் தனியா பொறந்தவங்கிற குறை எனக்கில்ல ஏன்னா ஐ'ம் பார்ன் வித் பெய்ன்', கல்யாணத்துக்குப் பிறகு பெண்களின் கனவுகள் காலாவதியாவது ஏன்? போன்ற வசனங்களின் மூலம் கவனம் ஈர்த்து விடுகிறார் வசனகர்த்தா விஜி. தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு வசனம் எழுதும் இவரின் முயற்சி இந்தப் படத்திலும் வீண்போகவில்லை.

    சந்தோஷ” மான இசை

    சந்தோஷ” மான இசை

    வாடி ராசாத்தி , நாலு கழுதை வயசாச்சி போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகின்றன. நீங்க ஜெயிச்சிட்டிங்க சந்தோஷ் வாழ்த்துக்கள்.

    மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும்:

    மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும்:

    13 இந்தியக் குடியரசுத்தலைவர்களில் ஒருவரே பெண், 14 பிரதமர்களில் ஒருவரே பெண், ஏன் இப்படி? என்பதுதான் படத்தின் மையக்கேள்வி. இதனை வைத்து படம் எடுத்த இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் காட்சிகளில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு சிறந்த படத்தைக் கொடுத்து பெண்களின் மீதான மதிப்பை அழுத்தமாக பதிவு செய்ததற்காக பரவாயில்லை என விட்டுவிடலாம்.

    English summary
    "36 Vayathinile" is special as the film marks the comeback of Jyothika after eight years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X