»   »  ஒரே நாளில் விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆன்டனி, சிபி படங்கள் பூஜை!

ஒரே நாளில் விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆன்டனி, சிபி படங்கள் பூஜை!

Posted by:
Subscribe to Oneindia Tamil

நேற்று வியாழக்கிழமை விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆன்டனி மற்றும் சிபிராஜ் ஆகியோரின் நான்கு புதிய படங்களுக்கு பூஜை போடப்பட்டது.

நான்குமே குறிப்பிடத்தக்க ஹீரோக்கள் படங்கள் என்பதால் கோடம்பாக்கம் பரபரப்பாக இருந்தது.

ஆண்டவன் கட்டளை

விஜய் சேதுபதி அடுத்து நடிக்க இருக்கும் ஆண்டவன் கட்டளை படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க இருக்கிறார். காக்கா முட்டை மணிகண்டன் இயக்குகிறார்.

மிஷ்கின் - விஷால்

அடுத்த படம் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் ‘துப்பறிவாளன்'. இந்தப் படத்தின் பூஜை விஷாலின் அலுவலகத்தில் எளிய முறையில் நடந்தது.

எமன்

‘பிச்சைக்காரன்' வெற்றியை தொடர்ந்து லைக்கா புரடொக்‌ஷன் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் படம் எமன். இதன் பூஜையும் நேற்று நடந்தது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார்.

சிபி படம்

சமீபத்தில் வெளியான போக்கிரி ராஜா படத்தில் வில்லனாக நடித்த சிபிராஜ் நடிக்கும் புதிய படம் ஒன்றின் பூஜையும் நேற்று நடந்தது. இப்படத்தில் சிபிராஜிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி நடிக்கிறார்கள். இப்படத்தை எம்.மணிகண்டன் இயக்கவுள்ளார்.

English summary
New movie poojas of Vijay Sethupathy, Vishal, Vijay Antony and Sibiraj have performed on Thurday in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos