»   »  இன்றைய படங்கள்... சாகசம், விசாரணை, பெங்களூர் நாட்கள், சேதுபூமி, நாமுகுமா!

இன்றைய படங்கள்... சாகசம், விசாரணை, பெங்களூர் நாட்கள், சேதுபூமி, நாமுகுமா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

பொங்கலுக்குப் பிறகு வரும் பெரிய வெள்ளிக்கிழமை இது. காரணம்.. இந்த வெள்ளியன்று ஒன்றல்ல... ஆறு புதிய படங்கள் வெளியாகின்றன.

இந்த ஆறுமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட படங்கள். கடந்த வாரம் வெளியான இறுதிச் சுற்று, அரண்மனை 2 இரண்டுமே நன்றாக ஒடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளியாகும் இந்த ஆறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைப்பது பெரும்பாடாகிவிட்டது.


இன்றைய படங்கள்...


சாகசம்

நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்த் நடிப்பில் வெளியாகும் பக்கா பொழுதுபோக்குப் படம் சாகசம். ஆஸ்திரேலிய அழகி அமண்டா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை தியாகராஜன் தயாரித்துள்ளார். அருண்ராஜ் வர்மா இயக்க, தமன் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.


பெங்களூர் நாட்கள்

பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் வெளியாகும் படம் பெங்களூர் நாட்கள். ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, பாபி சிம்ஹா நடித்துள்ள இந்தப் படம் மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸின் தமிழ் ரீமேக். கோபி சுந்தர் இசையமைக்க, கேவி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிவிபி சினிமாஸ் தயாரித்துள்ளது.


விசாரணை

ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் விசாரணை. பல சர்வதேச விழாக்களில் பாராட்டுகறளும் பரிசும் பெற்ற இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனமும் தயாரித்துள்ளன. ரஜினிகாந்தின் பாராட்டுகள் படத்துக்கு கூடுதல் ப்ளஸ்.


சேதுபூமி

கேந்திரன் முனியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் தமன் குமார், சம்ஸ்க்ருதி, சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். முத்துராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


நாளை முதல் குடிக்கமாட்டேன்

ராஜ், காந்தராஜ், சமர்த்தினி நடித்துள்ள நாளை முதல் குடிக்கமாட்டேன் படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது எந்த மாதிரிப் படம் என்பதை. எம்ஜி ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை செந்தில்ராஜா இயக்கியுள்ளார்.


இரண்டு மனம் வேண்டும்

பிரதீப் சுந்தர் இயக்கத்தில் அனில் கொட்டாரக்கரா தயாரித்துள்ள இரண்டு மனம் வேண்டும் படத்தில் சஜி சுரேந்திரன், சாய்னா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். முகமது அலி இசையமைத்துள்ளார்.


English summary
There are 6 new movies including Visaranai, Sagasam, Bangalore Naatkal are releasing today, Friday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos