»   »  ரியோ ஒலிம்பிக் 2016: ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்!

ரியோ ஒலிம்பிக் 2016: ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரியோ ஒலிம்பிக் போட்டியின் நல்லெண்ணத் தூதுவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

31 வது ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஆகஸ்ட் மாதம் பிரேசில் நாட்டில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியின் நல்லெண்ணத் தூதுவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இந்திய ஒலிம்பிக் சங்கம்(ஐஓஏ) நியமித்துள்ளது.

A.R.Rahman Goodwill Ambassador for Rio Olympics

முன்னதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். இதற்கு யோகேஷ்வரர் தத், மில்கா சிங், கவுதம் கம்பீர் போன்ற விளையாட்டு வீர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் சல்மான் கான் சர்ச்சையில் இருந்து தப்பிக்க மேலும் பலரை நல்லெண்ணத் தூதுவர்களாக ஐஓஏ நியமித்து வருகிறது. இதற்காக சச்சின் தெண்டுல்கர், அபினவ் பிந்த்ரா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரிடம் தூதுவர்களாக இருக்குமாறு ஐஓஏ வேண்டுகோள் விடுத்தது.

சச்சின் டெண்டுல்கர், அபினவ் பிந்த்ரா ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், தற்போது ரஹ்மானும் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து நல்லெண்ணத் தூதுவர் பதவி தனக்கு பெருமை அளிப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டியளித்திருக்கிறார்.

English summary
Music Composer A.R.Rahman India's 4th Goodwill Ambassador for Rio Olympics.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos