»   »  ஏ ஆர் ரஹ்மானுக்கு விருது... வழங்குகிறார்கள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே!

ஏ ஆர் ரஹ்மானுக்கு விருது... வழங்குகிறார்கள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சாதனை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு விருது வழங்குகிறார்கள் பிரபல பாடகிகள் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போன்ஸ்லே.

பிரபல இந்தி பின்னணி பாடகி சகோதரிகளான லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே இருவரும், மறைந்த தங்களின் சகோதரர் ஹிருதயநாத் மங்கேஸ்கர் பெயரில் அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தியுள்ளனர்.

A R Rahman to Receive Hridaynath Mangeshkar Award

திரை உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக இந்த விருதை வழங்கி வருகிறார்கள்.

இந்த ஆண்டு ‘ஹிருதயநாத் மங்கேஸ்கர்' விருது ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்க லதா மங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேவும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய இசையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்காகவும், உலக இசையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காகவும், இந்த ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த விருதை வழங்குகிறோம். விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெறுவதில் பெருமைப்படுக்கிறோம்," என்று கூறியுள்ளனர்.

இந்த விருது வங்கும் விழா வருகிற 26-ந்தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதில் பாலிவுட் திரை உலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே இருவரின் முன்னிலையில் ரஹ்மானுக்கு இந்த விருதினை வழங்குகிறார் பிரபல இயக்குநர் சுபாஷ் கய்.

English summary
Oscar-winning composer A R Rahman will be honoured with the Hridaynath Mangeshkar Award in Mumbai on October 26.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos