twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பக்தர்கள் போட்டோ எடுக்கக் கூடாது... ஆனா, அமீர்கான் சினிமா எடுக்கலாமா: இந்து அமைப்புகள் ஆவேசம்

    |

    மும்பை: மும்பை அருகே கோவிலிலுக்குள் செருப்பு அணிந்து வந்ததாக அமீர்கானுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளது.

    ஏற்கனவே தனது பி.கே. பட போஸ்டரால் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் அமீர்கான். ஆடைகள் எதுவும் அணியாமல் கையில் ஒரு டிரான்சிஸ்டரை மட்டும் பிடித்தபடி அமீர்கான் வெளியிட்ட பி.கே. பட போஸ்டர் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

    போஸ்டர் பிரச்சினை முடிவதற்குள்ளாகவே அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமீர்கான்.

    Aamir Khan's 'PK' shooting in Nashik gets interrupted

    செருப்புடன் அமீர்கான்...

    பி.கே படத்தின் படப்பிடிப்பு மும்பை அருகே நாசிக் நகர கோவில் ஒன்றில் நடைபெற்றது. அப்போது அமீர்கான் கோவில் வளாகத்திற்குள் காலில் செருப்பு அணிந்தபடி செல்லும் போட்டோ ஊடகங்களில் வெளியானது.

    எதிர்ப்பு...

    இதற்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சில தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மேலும், அக்கோவில் வளாகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

    எப்படி அனுமதி...?

    இது குறித்து அக்கோவில் வளாகத்தில் எழுத்து மூலமாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல் அமீர்கானின் படப்பிடிப்பிற்கு யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

    வழக்கு...

    விரைவில், இது தொடர்பாக அமீர்கானுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரவும் சில இந்து அமைப்புகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விளக்கம்...

    ஆனால், கோவில் நிர்வாகத்திடம் ரூ. 25 ஆயிரம் பணம் செலுத்தி முறைப்படி அனுமதி பெற்றே, இந்தப் படப்பிடிப்பை நடத்தியதாக பி.கே. படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

    பிரபலமடையும்...

    இதற்கிடையே கோவில் நிர்வாகி ஒருவர் மற்ற நிர்வாகிகளிடம் அனுமதி பெறாமல் படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால், பிரபல நடிகரான அமீர்கானின் படத்தில் வருவதன் மூலம் இக்கோவில் மேலும் பிரபலமடையும் என்பதால் மற்ற நிர்வாகிகள் பிரச்சினை செய்யாமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

    English summary
    The shooting of the film PK starring Aamir Khan was interrupted in Nashik, when the crew began its shoot at the famous Kala Ram Mandir on Monday, September 15, 2014.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X