twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலாமின் காலடிச் சுவடுகள்.. ரூ.1 கோடியில் லாரன்ஸ் தொடங்கிய கல்வி உதவித் திட்டம்

    By Manjula
    |

    சென்னை: தமிழ்த் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறிய ராகவா லாரன்ஸ் தற்போது இயக்குனராகவும் தமிழ்த் திரையுலகை கலக்கி வருகிறார்.

    சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 2 திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலித்து ராகவா லாரன்சின் அந்தஸ்தை திரை உலகில் உயர்த்திப் பிடித்திருக்கிறது.

    காஞ்சனா 2 திரைப்படத்தில் மிகவும் பிரபலமான மொட்ட சிவா கெட்ட சிவா வசனத்தை தற்போது தனது அடுத்த படத்தின் தலைப்பாக்கி இருக்கிறார் ராகவா லாரன்ஸ். மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா என 2 படங்களை இயக்கும் லாரன்ஸ் அவரே நாயகனாகவும் நடிக்க இருக்கிறார்.

    இந்த 2 படங்களையும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது,நடிகர் ராகவா லாரன்ஸ்,இப்படங்களின் அறிமுக விழா நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்றது.

    பசுமை திட்டம் 1 கோடி நிதியுதவி

    பசுமை திட்டம் 1 கோடி நிதியுதவி

    விழாவில் நடிகர் ராகவா லாரன்சுக்கு, சம்பள முன் பணமாக வேந்தர் மூவிஸ் சார்பில் அதன் தயாரிப்பாளர் மதன் ரூ.1 கோடியை கொடுத்தார். அந்த தொகையை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் ஏழைக்குழந்தைகளின் கல்வி மற்றும் மரக்கன்றுகள் நடும் ‘பசுமை' திட்டத்துக்கு வழங்குவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் மேடையிலேயே அறிவித்தார்.

    கல்வி மற்றும் பசுமை திட்டம்

    கல்வி மற்றும் பசுமை திட்டம்

    இதுகுறித்து பேசிய லாரன்ஸ் 100 குழந்தைகளை தேர்வு செய்து அவர்களின் கல்வி செலவிற்காக இந்த தொகையினை செலவு செய்வது மற்றும் மரங்கள் நடுவதின் மூலம் இந்த மாநிலத்தை பசுமை மாநிலமாக மாற்றுவது இந்த 2 திட்டங்கள் தற்போது எனது மனதில் இருக்கின்றன.

    கலாமின் காலச் சுவடுகள்

    கலாமின் காலச் சுவடுகள்

    இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று எனது அம்மாவிடம் கேட்டபோது நாம் முன்பே நினைத்தது போல இந்தத் திட்டத்திற்கு கலாமின் பெயரையே சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இறையன்பு ஐஏஎஸ்

    இறையன்பு ஐஏஎஸ்

    எனவே எனது அம்மாவின் விருப்பபடி இந்தத் திட்டத்திற்கு "கலாமின் காலச் சுவடிகள்" என்று பெயர் வைத்திருக்கிறோம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை முன்னால் ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு அவர்கள் பார்த்து கொள்வார்கள், அவருக்கு உதவியாக சில சமூக நல ஆர்வலர்களும் உடன் இருப்பார்கள்.

    1 கோடி ரூபாயா?

    1 கோடி ரூபாயா?

    "முதன்முதலில் நான் இந்தத் திட்டத்தைப் பற்றிக் கூறும்போது எனது மனைவியும் அம்மாவும் அதிர்ச்சி அடைந்து விட்டனர், 1 கோடி ரூபாய் என்பது பெரிய விசயமாக அவர்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் நான் பொறுமையாக இதன் மூலம் மற்றவர்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் கிடைக்கும் நன்மைகளை எடுத்துக் கூறினேன் கடைசியாக எனது விருப்பத்திற்கு எனது அம்மா ஒத்துக் கொண்டார்" என்று சிரித்தபடி முடித்தார் ராகவா லாரன்ஸ்.

    லாரன்ஸ் ட்ரஸ்ட் மற்றும் ஆர்பனேஜ் ஒன்றை தனது சொந்த செலவில் ஏற்கனவே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது...நடனத்திற்கு மட்டுமல்ல நல்ல மனசிற்கும் சொந்தக்காரராக மாறியிருக்கும் லாரன்சின் நல்ல மனதை நாமும் வாழ்த்துவோம்....

    English summary
    Abdulkalam Green Education: Director Raghava Lawrence Donates Rs 1 Crore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X