» 

நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்

Posted by:
 

நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
நடிகர் திலீப் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.

பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகர் திலீப். இயக்குனர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் உள்பட அவரது பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினியுடன் மாப்பிள்ளை, தர்மதுரை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினி தயாரித்த வள்ளி படத்திலும் நடித்தார்.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு தனது சொந்த ஊரான மைசூருக்கு குடிபெயர்ந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்த நிலையில் மைசூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று உடல்நிலை மிகவும் மோசமானது, மாரடைப்பும் ஏற்பட்டது. இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 52.

திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு மைசூரிலேயே நடக்கிறது.

Read more about: மரணம், dileep, திலீப்
English summary
Tamil actor Dileep who acted in Visu's Samsaram athu minsaram died today in Mysore.

Tamil Photos

Go to : More Photos