»   »  பாகுபலி 2: ராஜமௌலிக்குப் பதில் படப்பிடிப்பை நடத்திய நானி!

பாகுபலி 2: ராஜமௌலிக்குப் பதில் படப்பிடிப்பை நடத்திய நானி!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதாராபாத்: இயக்குநர் ராஜமௌலிக்குப் பதில் நடிகர் நானி பாகுபலி 2 படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் வளரும் நடிகர்களில் நானிக்கும் ஒரு இடமுண்டு. ராஜமௌலிக்கு தேசிய விருதினை பெற்றுக் கொடுத்த நான் ஈ படத்தில் நானியும் முக்கிய வேடமேற்று நடித்திருந்தார்.


Actor Nani Direct Baahubali 2

ஜென்டில்மேன் படத்துக்குப் பின் நானி நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ராஜமௌலி இயக்கும் பாகுபலி 2 படப்பிடிப்பும் ராமோஜி பிலிம் சிட்டியிலேயே நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த நானி, ராஜமௌலியின் அனுமதி பெற்று சில காட்சிகளை இயக்கியிருக்கிறார்.


நானி ஆக்ஷன் சொல்லும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டிருக்கும் படக்குழு ''இன்று எங்கள் படப்பிடிப்பை ஜென்டில்மேன் முடித்து வைத்தார்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.


நடிகராகும் முன் நானி உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Yesterday Actor Nani Visit Baahubali 2 Shooting Spot and He is Directing some Scenes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos