»   »  நடிகர் பிரபாஸின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பிரபாஸின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு மருத்துவமனையில் அனுமதி

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸின் பெரியப்பாவும், நடிகருமான கிருஷ்ணம் ராஜு மூச்சுத் திணறல் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் பிரபாஸின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு ஆந்திரா, தெலுங்கானாவில் பிரபலமான நடிகர் ஆவார். 76 வயதாகும் அவர் திங்கட்கிழமை மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளார். இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actor Prabhas' uncle Krishnam Raju hospitalised

கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றாலும் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் அவரின் உடல் நலம் குறித்து இன்று மாலைக்கு மேல் மருத்துவர்கள் அறிவிப்பு வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பிரபாஸ் மருத்துவமனைக்கு சென்று பெரியப்பாவுடன் 2 மணிநேரம் இருந்துள்ளார். கிருஷ்ணம் ராஜு சுமார் 100 படங்களில் நடித்துள்ளார். பிரபாஸை ஒரு நடிகராக்கிய பெருமை அவருக்கு உண்டு.

பிரபாஸ் தனது பெரியப்பாவின் செல்லப் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Veteran Telugu actor Krishnam Raju has been admitted to a Hyderabad hospital after he complained of difficulty in breathing and has been kept under observation.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos