»   »  'மைனா' நந்தினி கைதுக்கு பயந்து தலைமறைவா? - வீடியோ

'மைனா' நந்தினி கைதுக்கு பயந்து தலைமறைவா? - வீடியோ

கணவர் கார்த்திக் தற்கொலை வழக்கில் போலீசாரின் கைதுக்கு பயந்து நடிகை நந்தினி தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Written by: Suganthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவர் கார்த்திக் தற்கொலை வழக்கில் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் கைதில் இருந்து தப்பிக்க நடிகை நந்தினீ தலைமறவாகியுள்ளார்.

நந்தினியின் கணவர் கார்த்திக் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய மரணத்துக்கு மனைவி நந்தினியின் அப்பா தான் காரணம் என எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டார் கார்த்திக்.

 Actress Nandhini absconded

கார்த்திக் ஒரு ஜிம் மாஸ்டர். நந்தினியும் அவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

கார்த்திக், மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ பலமுறை அழைத்தும், அவர் மறுத்ததால் விரக்தியடைந்த கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார். அப்போது எழுதிய கடிதத்தில் தன் மரணத்துக்கு நந்தினியின் அப்பா காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கார்த்திக்கின் அம்மா, தன் மகன் மரணம் குறித்து சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து நந்தினியும் அவரது அப்பாவும் போலீஸ் தங்களை கைது செய்யாமல் இருக்க நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

அதையடுத்து, நந்தினியையும் அவரது அப்பாவையும் போலீசார் கைது செய்ய உள்ளனர். இதை அறிந்த நந்தினி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸ் அவரை தேடி வருகிறது.

English summary
Actress Nandini may be arrested in her husband's suicide case. Police is searching her for arrest but she absconded.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos