twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாயை அடுத்து கோலிவுட்டை கலக்க வரும் செல்பி பூனை

    By Soundharya
    |

    சென்னை: பொதுவாகவே செல்ல பிராணிகளை வைத்து படம் எடுப்பதில் ஹாலிவுட்காரர்கள் தான் கைதேர்ந்தவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவும் அவற்றுக்கு இணையாக ஒரு சில படங்களை உலக தரத்தில் உருவாக்கி ரசிகர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. சிபிராஜின் நடிப்பில் வெளியான 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம்.

    தற்போது அந்த வரிசையில் இணையத் தயாராக இருக்கிறது 'குளோபல் வுட்ஸ் மூவிஸ்' சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து இருக்கும் 'மியாவ்' திரைப்படம். இவர் உலகளவில் புகழ் பெற்ற இயக்குனரான 'பாரத் ரத்னா' சத்யஜித்ரே அவர்களின் 'டார்கெட்' என்னும் திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    After dog, cat waits to rock Kollywood

    இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக 'பெர்சியன் கேட்' எனப்படும் பூனையை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த 'மியாவ்' திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி. இசையமைப்பாளர் ஸ்ரீஜித் இடவானோ (அறிமுகம்), ஒளிப்பதிவாளர் போஜன் கே தினேஷ் (சத்தம் போடாதே) மற்றும் படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா என திறமையான தொழில்நுட்ப கலைஞர்களை இந்த 'மியாவ்' படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.

    "செல்பி' என பெயரிடப்பட்ட ஒரு சாதுவான பூனையானது, நான்கு இளைஞர்கள் ஏற்படுத்தும் இன்னல்களால் வெகுண்டு எழுந்து அவர்களுக்கு தொல்லைகளை கொடுக்கிறது. அது ஏன்...எதற்காக...என்பது தான் எங்கள் 'மியாவ்' படத்தின் ஒரு வரி கதை. காட்சிகள் யாவும் மிக தத்ரூபமாக அமைய, 'மியாவ்' படத்தின் கிராபிக்ஸ் கலைஞர் ரமேஷ் ஆச்சார்யா ஏறக்குறைய 550 இடங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸை பயன்படுத்தி இருக்கிறார்.

    'மியாவ்' படத்தை பார்க்கும் ரசிகர்கள் யாராலும் எது உண்மையான பூனை, எது கிராபிக்ஸ் பூனை என்பதை கண்டு பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் 'மியாவ்' படத்தை உருவாக்கியுள்ளோம். செல்லப் பிராணிகள் வளர்க்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இந்த 'மியாவ்' படம் சமர்ப்பணம்..." என்கிறார் 'மியாவ்' படத்தின் இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி.

    "மொத்தம் 120 நிமிடம் ஓடக்கூடிய 'மியாவ்' திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் பாராட்டுகளை பெறும். தமிழ்நாட்டை பொறுத்த வரை நாய்களை தான் தங்கள் செல்லப் பிராணிகளாக அதிகளவில் மக்கள் வளர்த்து வருகின்றனர். ஆனால் 'மியாவ்' படத்தை பார்த்த பிறகு அவர்களுக்கு பூனைகள் மீது ஒரு தனி அன்பு ஏற்படும்...குழந்தைகள் மட்டுமில்லை, இளைஞர்கள், குடும்பங்கள் என எல்லா தரப்பினருக்கும் ஏற்ற திரைப்படமாக எங்கள் 'மியாவ்' படம் இருக்கும்..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'மியாவ்' படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ்.

    English summary
    ‘MEOW’ is all about a cat named ‘Selfie’. Four youngsters begin to trouble Selfie and at a certain point of time Selfie takes revenge on them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X