»   »  காஜலும் நோ, கத்ரீனாவும் நோ: இது என்னய்யா சிரஞ்சீவிக்கு வந்த சோதனை!

காஜலும் நோ, கத்ரீனாவும் நோ: இது என்னய்யா சிரஞ்சீவிக்கு வந்த சோதனை!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கத்தி தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Select City
Buy Kaththi (U) Tickets

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த கத்தி படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் விஜய் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். அரசியலில் பிசியாக இருந்த அவரை ரசிகர்கள் பெரிய திரையில் பார்க்க ஆசைப்பட்டனர்.


After Kajal, Katrina too says NO to Chiranjeevi

இந்நிலையில் சிரஞ்சீவி கத்தி ரீமேக்கில் நடிக்கிறார். படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்க விவி விநாயக் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிருவுக்கு அதாங்க சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்குமாறு காஜல் அகர்வாலை கேட்டுள்ளனர்.


அந்த அம்மணியோ சாரி வேறு ஆளப் பாருங்க என்று கூறிவிட்டாராம். இதையடுத்து பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை அணுகி கொஞ்சம் தெலுங்கு திரையுலகம் பக்கம் வந்து சிருவுடன் நடித்துக் கொடுத்துப் போங்க என்று கேட்டுள்ளனர்.


காஜலை போன்றே கத்ரீனாவும் சிருவுடன் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனால் யாரை ஹீரோயினாக போடுவது என்று விழிக்கிறாராம் தயாரிப்பாளர்.

English summary
According to reports, after Kajal Agarwal, Katrina Kaif has also refused to act with Chiranjeevi in his telugu remake of Kaththi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos