» 

கனடாவில் ஐ பட இசை வெளியீடு.. அர்னால்ட் பங்கேற்பு

Posted by:
 

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் நடக்கிறது. இதில் ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக எவர்கிரீன் ஆக்ஷன் ஹீரோ அர்னால்ட் ஷ்வார்ஸ்நேக்கர் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் - எமி ஜாக்ஸன் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

கனடாவில் ஐ பட இசை வெளியீடு.. அர்னால்ட் பங்கேற்பு

இதில் விக்ரம் தனது அநியாயத்துக்கு ஏற்றி இறக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளாராம். இனி இப்படியெல்லாம் விஷப் பரீட்சை செய்யக் கூடாது என மருத்துவர்களே எச்சரிக்கும் அளவுக்கு மெனக்கெட்டு நடித்துள்ளார் விக்ரம். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் ஆவலை ஏகத்துக்கும் கிளப்பியிருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை கனடாவில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

கனடாவில் நடக்கும் இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

கமல் ஹாஸனின் தசாவதாரம் படத்துக்காக ஜாக்கி சானை சென்னைக்கு வரவழைத்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பது நினைவிருக்கலாம்.

Read more about: ai, shankar, vikram, , ஷங்கர், விக்ரம்
English summary
Shankar's Ai movie audio launch will be held in Canada soon.

Tamil Photos

Go to : More Photos