twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலி ரிலீசுக்குப் பிறகும் ரஜினி படத்துடன் விமானம் பறக்கும்?- ஏர் ஏசியா

    By Shankar
    |

    சென்னை: கபாலி ரஜினிகாந்த் படத்துடன் தயாராகியுள்ள ஏர் ஏசியா விமானம், கபாலி படம் வெளியான பிறகும் தொடர்ந்து பறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கபாலி படத்தின் விளம்பரங்களுக்காக ஏர் ஏசியா நிறுவனத்துடன் கைகோத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. அதன்படி, ஏர் ஏசியாவின் விமானங்களில் கபாலி படம் விளம்பரம் செய்யப்படும். மேலும் படம் வெளியாகும் தினத்தன்று சென்னையில் முதல் காட்சி பார்ப்பதற்காக பெங்களூரிலிருந்து சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கபாலி பட சிறப்பு ஆஃபராக, சென்னையிலிருந்து மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூருக்கு மலிவு விலையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    தற்போது கபாலி போஸ்டர்களைக் கொண்ட ஏர் ஏசியா விமானத்தின் புகைப்படங்கள் வெளியாகி இந்திய சினிமாவுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளன.

    ஏ 320

    ஏ 320

    ஏ-320 என்கிற அந்த விமானம் நேற்று முதல் பெங்களூர், தில்லி, கோவா, சண்டிகர், ஜெய்பூர், குவாஹத்தி, இம்பால், விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் வெளிநாடுகளுக்கும் இதுபோல விமானம் இயக்கப்பட உள்ளது.

    இந்திய சினிமா இதுவரை பார்த்திராத இந்த விளம்பர உத்தி குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

    ஒரு மாசம்...

    ஒரு மாசம்...

    விமானத்தில் கபாலி முழு டிசைன் வேலைகளும் செய்துமுடிக்க ஒரு மாதமானது. ஆசியாவில் இதுபோல செய்யப்படுவது முதல்முறை என்பதால் கவனத்துடன் செய்ய வேண்டியிருந்தது. இது வழக்கமான பயணிகள் விமானமாக இருந்தாலும் கபாலி படத்துடன் இணைந்துள்ளதால் அதற்கு விசேஷ கவனம் கிடைத்துள்ளது.

    ரஜினிக்கு நாங்கள் தரும் மரியாதை

    ரஜினிக்கு நாங்கள் தரும் மரியாதை

    கபாலி விளம்பரம் தாங்கியுள்ள இந்த விமானம், படம் வெளியான பிறகும் தொடர்ந்து இயக்கப்படும். சூப்பர் ஸ்டாருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நாங்கள் தரும் மரியாதை அது. படக்குழு வந்து விமானத்தைப் பார்த்தார்கள். ரஜினிக்கும் இந்தத் தகவல் தெரிந்து அவர் விமானத்தின் புகைப்படங்களைப் பார்த்திருப்பார் என நினைக்கிறோம். இந்த விமானத்தில் பயணம் செய்கிறபோது ரசிகர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

    கபாலி படத்துடன்

    கபாலி படத்துடன்

    படம் வெளியாகிற நாளன்று பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படும். விமானத்தில் பயணம் செய்கிற ரசிகர்கள், கபாலி படங்களுடன் வடிவமைக்கப்பட்ட காபி கோப்பை, பட டிக்கெட் உள்ளிட்ட பொருள்களைப் பெறுவார்கள். அதேபோல ரஜினிக்குப் பிடித்தமான மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்படும்," என்று தெரிவித்தார்.

    English summary
    How Kabali flights designed? Here is the explanation from Air Asia.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X