twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா ரஜினி... ஐநாவில் பரத நாட்டியமாடும் முதல் பெண் கலைஞர்!

    By Shankar
    |

    சென்னை: ஐநா சபையின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, அங்கு பரத நாட்டியம் ஆடவிருக்கிறார்.

    இதன் மூலம் ஐநாவில் பரத நாட்டியம் ஆடும் முதல் கலைஞர் என்ற பெருமையைப் பெறுகிறார் ஐஸ்வர்யா.

    Aishwarya Rajini to perform Bharatha Nattiyam in UNO

    மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இதில், இந்திய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா பரத நாட்டியத்தை அரங்கேற்ற இருக்கிறார்.

    இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இந்தியாவிலிருந்து முதன்முறையாக நடனமாட அழைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கு முன்னர் இந்தியாவின் சார்பில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடியுள்ளார். பண்டிட் ரவிசங்கர், எல் சுப்பிரமணியம், ஜாகிர் ஹுசேன் ஆகியோர் ஐநாவில் கலை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். ஆனால் முதல் முறையாக நடனம் ஆடப் போகும் இந்திய கலைஞர் ஐஸ்வர்யாதான்.

    மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நாடுகளின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறவிருக்கிறது.

    ஐஸ்வர்யா தனுஷ் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

    English summary
    Rajinikanth's elder daughter Aishwarya is going to perform Bharatha Nattiyam in UNO and this is the very first time in the history of UNO
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X