»   »  ஏப்ரலில் ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வை.. உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் மோதுகிறது!

ஏப்ரலில் ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வை.. உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் மோதுகிறது!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வை ராஜா வை படம் வரும் ஏப்ரல் வெளியீட்டுப் பட்டியலில் இணைந்தது.

பெரிய பட்ஜெட் படங்களான உத்தம வில்லன், நண்பேன்டா, ஓ காதல் கண்மணி படங்களுடன் இந்த வை ராஜா வையும் மோதுகிறது.

ஷூட்டிங் ஓவர்

3 படத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் வை ராஜா வை. கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக், டாப்சி நடித்துள்ள இந்தப் படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன.

யுவன்

யுவன் சங்கர் ராஜா இசையில் கடந்த டிசம்பரில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது படத்துக்கு பின்னணி இசைச் சேர்ப்பு வேலை நடந்து வருகிறது.

ஐஸ்வர்யா ட்வீட்

இப்போது சரியான வெளியீட்டு நேரத்துக்காக காத்திருக்கிறார் ஐஸ்வர்யா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "வை ராஜா வை பின்னணி இசைச் சேர்ப்பு முடிந்துவிட்டது. யுவன் சங்கர் ராஜா கலக்கியிருக்கிறார். ஏப்ரலில் படம் வெளியாகவிருக்கிறது," என்று கூறியுள்ளார்.

பெரிய படங்கள் வெளியாகும் மாதம்

ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. இந்தப் படம் வெளியாகும் ஏப்ரல் மாதத்தில் கமலின் உத்தம வில்லன், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி, உதயநிதியின் நண்பேன்டா போன்ற படங்கள் வெளியாகவிருக்கின்றன.

English summary
Aishwarya Dhanush’s Vai Raja Vai is all set for release in April along with other biggies like Kamal Haasan’s Uttama Villain.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos