»   »  'அஜீத்'துக்கு வில்லன்… சசிகுமாருக்கு கொக்கி போடும் சிவா?

'அஜீத்'துக்கு வில்லன்… சசிகுமாருக்கு கொக்கி போடும் சிவா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சமீபகாலமாக ஹீரோக்களை விட வில்லன்களே அதிகம் பெயர் எடுக்கிறார்கள். எந்திரனில் ரஜினி தொடங்கி வைத்ததை அஜித் மங்காத்தாவில் தொடர, ராணா, அரவிந்த்சாமி, அருண் விஜய் என சூர்யா வரை தொடர்கிறது.

வில்லன் பலமாக இருக்கும் படங்கள் பெரிய வெற்றியும் பெறுகின்றன.

பவர் வில்லன்

சிவா - அஜித் இணையும் அடுத்த படத்துக்கான காஸ்டிங் நடந்துகொண்டிருக்கிறது என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். மிக முக்கியமான வில்லன் ரோலுக்கு பவரான ஆளை கேட்டிருக்கிறார்கள்.

அஜீத்துக்கு சசிகுமார் ஓகே...

அது சசிகுமார். சசிகுமார் இதுவரை ஹீரோ தவிர வேறு ரோலிலும் நடித்ததில்லை. படம் ஸ்டைலிஷான படம் என்பதால் இதுவரை ஸ்டைலிஷாக பார்க்காத ஒருவரை ஸ்டைலிஷ் வில்லனாக காட்டினால் நன்றாக இருக்கும் என்பது சிவாவின் திட்டம்.

சசிகுமார் தயக்கம்

அதற்கு சசிகுமார் நல்ல சாய்ஸ். அஜித்தும் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம். சசிகுமாரிடம் சுமார் ஒரு மாத காலமாக இதற்காக பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர் இன்னமும் முடிவு சொல்லாமல் இழுத்துக்கொண்டிருக்கிறாராம். இப்போதைக்கு ஹீரோவிலிருந்து வில்லனாக பாதை மாறுவது சரியா என்பது அவர் தயக்கம்.

இன்னொரு வில்லனும் உண்டு

பொதுவாக சிவா படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வில்லன்கள் இருப்பார்கள். இதிலும் அப்படித்தான். இன்னொரு வில்லனுக்கு சமீபகாலமாக வில்லன் வேடங்களில் முத்திரை பதித்துவரும் ஆர்கே.சுரேஷிடம் பேசியிருக்கிறார்கள்.

English summary
Sources says that Ajith 57 team is approaching Sasikumar for main villain role.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos