» 

நாளை மறுநாள் மீண்டும் ரிலீஸாகும் அஜீத்தின் 'மங்காத்தா'

Posted by:

சென்னை: அஜீத்தின் மங்காத்தா படத்தின் சிறப்பு ஷோ நாளை மறுநாள் தூத்தக்குடியில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெறுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் குமார், த்ரிஷா நடித்த படம் மங்காத்தா. அஜீத் முதன்முதலாக திரையில் நரைத்த முடியுடன் நடித்தார். இதை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்களோ என்று வெங்கட் பிரபு அஞ்சினார்.

ஆனால் அஜீத்தின் இந்த லுக் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

2011ல் சூப்பர் ஹிட்

2011ம் ஆண்டு ரிலாஸன படங்களில் மங்காத்தாவும் ஹிட்டானது. அஜீத்தின் சால்ட் அன்ட் பெப்பர் லுக் வெகுவாக பேசப்பட்டது.

2 ஆண்டு முடிந்தது

மங்காத்தா படம் ரிலீஸாகி 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. மங்காத்தாவில் நடித்தற்காக அஜீத் குமாருக்கு 3 விருதுகள் கிடைத்தது.

ஸ்பெஷல் ஷோ

மங்காத்தா ரிலீஸாகி 2 ஆண்டுகள் முடிந்தை கொண்டாடும் விதமாக நாளை மறுநாள் காலை 11 மணிக்கு அப்படத்தின் சிறப்பு திரையிடலுக்கு தூத்துக்குடியில் உள்ள நியூ கிளியோபாட்ரா தியேட்டர் ஏற்பாடு செய்துள்ளது.

See next photo feature article

நல்ல நோக்கம்

இந்த சிறப்பு ஷோ மூலம் கிடைக்கும் பணம் பார்வையற்ற குழந்தைகளின் கல்விச் செலவுக்காக வழங்கப்படும்.

Read more about: ajith, mankatha, special show, அஜீத், மங்காத்தா
English summary
New Cleopatra theatre in Tuticorin has arranged for a sepcial show of Ajith's 50th film Mankatha to commemorate its second anniversary.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos