»   »  6 நாட்களில் 60 கோடியை அள்ளியது அஜீத்தின் வேதாளம்

6 நாட்களில் 60 கோடியை அள்ளியது அஜீத்தின் வேதாளம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடிப்பில் வெளியான வேதாளம் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 60 கோடிகளை வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Select City
Buy Vedalam (U) Tickets

அஜீத், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, தம்பி ராமையா, அஸ்வின் மற்றும் அப்புக்குட்டி ஆகியோரின் நடிப்பில் தீபாவளியன்று வெளியான வேதாளம் வசூலில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.


கடந்த 10 ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளியான இப்படம் முதல் 6 நாட்களில் சுமார் 60 கோடிகளை அள்ளியிருக்கிறது. முன்பதிவில் சுமார் 20 கோடியை வசூலித்த வேதாளம் முதல்நாளில் 15.5 கோடிகளை வசூலித்து இருந்தது.


Ajith's Vedalam Collects 60 Crores

உலகம் முழுவதும் சுமார் 60 கோடிகளை வசூலித்த (தமிழ்நாட்டில் 50 கோடி) இப்படம் விடாத மழையிலும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. படத்தை ஒன்மேன் ஆர்மியாக தோளில் தூக்கி சுமந்த அஜீத் இதன்மூலம் தான் வசூல்கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்.


தமிழ்நாடு தவிர கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் வேதாளம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


வருணபகவான் வழிவிடும் பட்சத்தில் வேதாளத்தின் வசூல் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Ajith Kumar, Shruthi Haasan, Lakshmi Menon Starrer Vedalam Movie More than 60 Crore Collects at Worldwide Box Office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos