»   »  ரஜினிக்கு தளபதி, அஜீத்துக்கு என்னை அறிந்தால்: 'தல' ரசிகர்கள்

ரஜினிக்கு தளபதி, அஜீத்துக்கு என்னை அறிந்தால்: 'தல' ரசிகர்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை அறிந்தால் படம் ரஜினி நடித்த தளபதி படம் போல ஹிட்டாகும் என்று அஜீத் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயுள்ளது. முதலில் இந்த பொங்கல தல பொங்கல் என்றார்கள். அதனால் ரசிகர்களும் தல பொங்கலை கொண்டாடத் தயாராகினர். பின்னர் படம் ஜனவரி 29ம் தேதி ரிலீஸாகும் என்றார்கள்.

இந்நிலையில் தான் படம் சென்சாருக்கு சென்றது.

தாமதம்

தற்போது சென்சார் போர்டு பிரச்சனையால் என்னை அறிந்தால் படத்திற்கு சான்றிதழ் கிடைக்கத் தாமதமாகியுள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி ஐந்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

யோசனை

படம் தள்ளிக் கொண்டே போகும் நேரத்தில் படம் பற்றி ரூம் போட்டு யோசித்த அஜீத் ரசிகர்களுக்கு ஒரு விஷயம் கிடைத்துள்ளது.

தளபதி

தளபதி படத்தில் முதலில் ரஜினி இறப்பதாக கிளைமாக்ஸ் வைத்து பின்பு அது மாற்றப்பட்டது. தற்போது என்னை அறிந்தால் படத்திலும் அஜீத் இறப்பது போன்ற கிளைமாக்ஸை கௌதம் மாற்றியுள்ளார். இந்த சென்டிமென்ட்டால் என்னை அறிந்தால் படம் தளபதி போன்று வெற்றி பெறும் என்கிறார்கள் தல ரசிகர்கள்.

ஹிட்டானா சரி

என்ன சென்டிமென்ட்டோ, படம் ஹிட்டானால் சரி. பலரின் பல மாத உழைப்பு வீணாகமல் இருந்தால் மகிழ்ச்சியே.

 

 

English summary
According to Thala fans, Yennai Arindhaal will be a hit like Rajini's Thalapathi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos