»   »  அண்ணனுக்கு சமந்தா... தம்பிக்கு ஷ்ரேயா!

அண்ணனுக்கு சமந்தா... தம்பிக்கு ஷ்ரேயா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவைத் தான் திருமணம் செய்யப் போகிறார் சமந்தா.

இதுதான் கடந்த சில வாரங்களாக பரவி வரும் செய்தி. சமந்தா தனக்கு விரைவில் காதல் திருமணம் என்று சொல்லப் போகத்தான் இந்த செய்திகள் றெக்கை கட்டின.

Akkineni Akil to marry designer Shreya

ஒன்றாக வாழ்கின்றனர். நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது என்று செய்திகள் தினமும் வந்துகொண்டே இருக்கின்றன. இதை நாகார்ஜுனா குடும்பத்தினரும் மறுக்கவில்லை.

ஆனால் நாகார்ஜுனா குடும்பத்தில் இன்னொருவரும் திருமணத்துக்கு ரெடி ஆகிவிட்டார். அவர் அக்கினேனி அகில். நாகார்ஜுனா - அமலா மகனான அகில் சமீபத்தில்தான் சினிமாவில் அறிமுகமாகி ஹிட் அடித்தார்.

அவர் காதலிப்பது ஷ்ரேயா பூபாலை. இவர் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல டிசைனர். மிகப்பெரும் தொழிலதிபரான ஷாலினி பூபாலின் மகள்.

அகிலுக்கு 22 வயதுதான் ஆகிறது. முதல் படம் தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதுபற்றி கேட்டால், "நான் இப்போதே திருமணமாகி செட்டில் ஆகிவிட முடிவு செய்துவிட்டேன். திருமணத்துக்கு பின்னர் கேரியரில் மட்டுமே கவனம் இருக்கும் அல்லவா? அதுதான் காரணம்," என்று பதிலளித்திருக்கிறார்.

English summary
Sources say that Nagarjuna's second son Akil is marrying popular designer Shreya Bhoopal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos