»   »  அஜீத்தை அடுத்து விஷால் படத்தில் நடிக்கும் அக்ஷரா ஹாஸன்

அஜீத்தை அடுத்து விஷால் படத்தில் நடிக்கும் அக்ஷரா ஹாஸன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் தயாரித்து நடித்து வரும் துப்பறிவாளன் படத்தில் அக்ஷரா ஹாஸன் நடிக்கிறாராம்.

கத்திச் சண்டை படத்தில் நடித்து முடித்துள்ள விஷால் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரே தயாரித்தும் வருகிறார்.


விஷாலுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். படத்தில் பிரசன்னாவும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்.


அக்ஷரா

விஷால் தனது படத்தில் புதிதாக சேர்ந்துள்ள நடிகை பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அது வேறு யாரும் இல்லை உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா தான்.


அக்ஷரா

துப்பறிவாளன் படத்தில் புதிதாக அக்ஷரா ஹாஸன் இணைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன் என விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


தல 57

நடிக்க மாட்டேன், கேமராவுக்கு பின்னால் தான் இருப்பேன் என்று அடம்பிடித்து வந்த அக்ஷரா ஷமிதாப் படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு தற்போது 'தல 57' படத்தில் நடித்து வருகிறார்.


ஸ்ருதி

விஷால் முன்னதாக ஸ்ருதி ஹாஸனுடன் சேர்ந்து பூஜை படத்தில் நடித்தார். தற்போது அவரது தங்கை அக்ஷஹா ஹாஸனுடன் துப்பறிவாளன் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனுஷ்

விஷாலுக்கு முன்பாக தனுஷ் தான் அக்கா ஸ்ருதி ஹாஸன், தங்கை அக்ஷராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Vishal tweeted that,' Happy 2 announce another addition to our #Thupparivalan cast.a warm welcome to AksharaHaasan1 aka akshu.gna b damn exciting n rivettiing.GB'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos