twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'முரளி எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க?' - உதவி இயக்குநரை திக்குமுக்காட வைத்த ரஜினி!

    By Shankar
    |

    ரஜினியின் எளிமை, சக நடிகர்கள், உதவி இயக்குநர்களுடன் அவர் பழகும் விதம் என ஒவ்வொன்றும் தனி கவனம் பெறுவதை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.

    இந்த முறையும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ள, 2.ஓ படத்தின் டப்பிங்கின்போது.

     An Assistant director's experience with Rajinikanth

    ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய முரளி மனோகர், '2.ஓ' படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரஜினிக்கும் தனக்கும் நடந்த உரையாடலை தன்னுடைய பேஸ்புக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    "முரளி எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க..?"- என்ற அவரின் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான்.

    "சீக்கிரம் சார்" திக்குமுக்க்காடி, சமாளிப்பாகச் சொன்னேன்.

    "ஸ்க்ரிப்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்களா..?"- என விடாப்பிடியாகத் தொடர்ந்து கேட்டால் என்னதான் செய்ய முடியும்?!

    "ஆமா சார்..." - என என்னையுமறியாமல் சொல்லி வைத்தேன்!

     An Assistant director's experience with Rajinikanth

    "நல்லாப் பண்ணுங்க... (சில நொடிகள் தன் தாடியைத் தடவி யோசித்துவிட்டு) அவசரப் படாதீங்க... உங்க படம் (கர்ண மோட்சம்) நீங்க யாருன்னு சொல்லிருச்சு... ப்பா... இன்னும் அதோட தாக்கம் என்னை விட்டுப் போகலிங்க... சீக்கிரம் பண்ணுங்க," - அச்சு பிசகாத, மிகைப்படுத்தப்படாத அந்த வார்த்தைகள்!

    "சரிங்க சார்" - என மீண்டும் எனக்குள்ளிருந்து தன்னியல்பாக வெளிப்பட்ட குரல்.

    எனக்குள்ள அந்த நொடி என்னன்னா, எளிமையாச் சொல்லணும்னா, சீக்கிரம் பண்றதா, அவசரப்படாதீங்கன்னு சொன்னதைக் கேட்கிறதான்னு தெரியாம புரியாம திகைச்சு நின்ன தருணம்.

    உண்மையா அவர் பேச்சில இருந்த ஒரு அக்கறையை மட்டும் உணர்ந்தேன்! சிலிர்த்தேன்!!

    நன்றிகள் #ரஜினி சார்!

    ஆயிரமாயிரம் நன்றிகள்; என் குருநாதரும், வழிகாட்டியும், படைப்பாற்றலும், எல்லாத்துக்கும் மேல என் நல விரும்பியுமான, #ஷங்கர் சாருக்கு!!!

    English summary
    Murali Manohan, one of the asst directors of Shankar has shared his experience with Rajinikanth during 2.O post production and hailed the superstar's simplicity and kindness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X