»   »  பீப் பாடல் ஒரு சின்ன விஷயம்... சொல்வது அனிருத்

பீப் பாடல் ஒரு சின்ன விஷயம்... சொல்வது அனிருத்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவுடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவதில் தனக்கு எந்த வித வருத்தமும் இல்லை என்று அனிருத் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியான பீப் பாடல் சிம்பு, அனிருத் இரண்டு பேரின் திரை வாழ்க்கையிலும் மிகுந்த சங்கடங்களை ஏற்படுத்தியது.

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் முதன்முறையாக சிம்பு, காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பிரச்சினையை சற்று தணியச் செய்தார்.

சிம்பு, அனிருத்

கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான பீப் பாடல் சிம்பு, அனிருத் இருவரின் திரை வாழ்க்கையையும் கேள்விக்குறியாக மாற்றியது. இதில் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அனிருத் கோவை காவல்நிலையம் சென்று நள்ளிரவில் விளக்கமளித்து வந்தார்.

 

 

ஏகப்பட்ட

நீதிமன்றத்தில் ஏகப்பட்ட முன்ஜாமீன்களைப் பெற்ற சிம்பு,ஒருவழியாக கோவை காவல்நிலையம் சென்று கடந்த மாதம் விளக்கமளித்தார். மேலும் இந்த விவகாரத்தில் அனிருத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறி தானே முழுப் பொறுப்பையும் ஏற்றார்.

மீண்டும்

இந்த விவாகரத்திற்குப் பின் மீண்டும் சிம்பு, அனிருத் இணைந்து பணிபுரியும் சூழல் வருமா? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்தது.தற்போது இந்தக் கேள்விக்கான பதிலை அனிருத் கூறியிருக்கிறார்.

 

 

சின்ன விஷயம்

"பீப் பாடல் ஒரு சின்ன விஷயம், தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கப்பட்டுவிட்டது. எனக்கும் அந்தப் பாடலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென நான் கோயம்புத்தூர் காவல் நிலையத்திலும் கடிதம் கொடுத்துவிட்டேன்.

மக்கள் ஆர்வம்

இதனால் ஏன் நான் சிம்புவுடன் இணைந்து பணியாற்றாமல் இருக்கப் போகிறேன். உண்மையைச் சொன்னால் நாங்கள் இருவரும் இணைந்து மீண்டும் வேலை செய்தால், என்ன தரப்போகிறோம் என்பதில் கண்டிப்பாக மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்" இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

 

 

English summary
'I will Definitely working with Simbu' Anirudh says in Recent interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos