twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோதனைகளை கடந்து சாதனை படைக்க வேண்டும் - அனிருத்

    By Manjula
    |

    சென்னை: தனது வாழ்வில் நடந்த சோதனைகளைக் கடந்து சாதனை படைக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியிருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த ஐஐஎப்ஏ உத்சவ விழாவில் சிறந்த இசையமைப்பாளர் விருது இளம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு கிடைத்தது.

    Anirudh Talks About IIFA Award

    மாரி படத்தின் இசைக்காக அவர் இந்த விருதைப் பெற்றார். விழா மேடையில் அவர் பேசும்போது "இந்த மேடையில் நிறைய பேசவேண்டும்.

    சில நாட்களாகவே நிறைய சோதனைகள் வந்து விட்டது. ஆனால் அந்த சோதனைகளை கடக்க வேண்டும். அப்போதுதான் சாதனை படைக்க முடியும்.

    இந்த விருதிற்கு என்னைத் தேர்ந்தெடுத்த ஐஐஎப்ஏ மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.முதல் முறையாக இந்த விருதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன்.

    இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது" இவ்வாறு அனிருத் கூறினார். சமீபத்தில் பீப் பாடல் பிரச்சினையில் அனிருத்தின் பெயர் சிக்கியது.

    இதனால் படுவேகமாக இவரின் மார்க்கெட் சரிந்து தற்போது வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. இவர் கைவசம் இருந்த படங்கள் வேறு இசையமைப்பாளர்களின் கரங்களுக்கு சென்று விட்டன.

    இதைத்தான் அனிருத் சோதனைகளைக் கடந்து சாதனை படைக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். தற்போது தன்மீது உள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் காதலர் தினத்தில் பெண்களின் பெருமையை எடுத்துக் கூறும் ஆல்பம் ஒன்றை வெளியிடுகிறார்.

    மேலும் அஜீத்தின் அடுத்த படத்திலும் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறுகின்றனர். இதனால் பழையபடி அனிருத் மீண்டு வரும் காலம் தொலைவில் இல்லை என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கின்றனர்.

    English summary
    Anirudh Says about IIFA Award "Thank you IIFA and to all the fans for Best Music Director.. Happy to take home the first IIFA for the South
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X