twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மலைடா... அண்ணாமலை'... 25 ஆண்டுகள் தாண்டியும் அதே பவர்!

    By Shankar
    |

    நடிகர் விஜய்யிடம் ஒருமுறை எந்த ரஜினி படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு விஜய் சொன்ன பதில் 'அண்ணாமலை'. இப்போது அல்ல சின்ன வயதில் இருந்தே விஜய்க்கு அண்ணாமலை என்றால் கொள்ளை பிரியம். நடிக்க வந்த புதிதில் விஜய் அண்ணாமலையில் ரஜினி சவால் விடும் வசனத்தை பேசித்தான் நடித்துக் காட்டுவாராம்.

    விஜய் மட்டுமல்ல ரஜினி ரசிகர்கள் அனைவருக்குமே ஃபேவரிட் படங்கள் வரிசையில் நிச்சயம் அண்ணாமலை சேரும். நடிக்க வருபவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்துக்கு அடுத்து, அதிகம் பேசிக் காட்டியது ரஜினி அண்ணாமலை இடைவேளையின் போது பேசும் வசனமாகத்தான் இருக்கும்.

    அண்ணாமலை நாட்கள்

    அண்ணாமலை நாட்கள்

    எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது... நான் பள்ளி செல்லத் தொடங்கியிருந்த நேரம். எங்கள் ஊர் தியேட்டருக்கு படம் ரிலீஸாகி மூன்று மாதங்கள் கழித்துதான் வரும். அப்படி ஒரு ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்துக்கு தான் மெலட்டூர் ஸ்ரீகணேசா என்ற எங்கள் தியேட்டரில் அண்ணாமலை எடுத்திருந்தார்கள்.

    ரஜினி படம் என்றால் ஒட்டிக்கொண்டிருக்கும் போஸ்டரை பார்ப்பதற்காகவே கூட்டமாக கூடி நிற்பார்கள். அப்பாவி பால்காரனாகவும் செம ஸ்டைலிஷ் பணக்காரனாகவும் ரஜினியின் இரண்டு கெட்டப்களை பார்த்ததும் புரிந்துவிட்டது. இது வழக்கமான சினிமா அல்ல என்று. இன்றும் கமர்ஷியல் படங்களுக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டு அண்ணாமலைதான்.

    நடிப்பில் புதுப் பரிமாணம்

    நடிப்பில் புதுப் பரிமாணம்

    யார் சொன்னார்கள் கமர்ஷியல் படங்களில் நடிக்க வேலையில்லை என்று. அண்ணாமலை படத்தைப் பாருங்கள் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் எத்தனை வித்தியாசம் காட்டியிருக்கிறார் ரஜினி என்பது தெரியும். பார்த்து முடித்த ஒவ்வொருவருமே பால்காரனாகி பணக்காரனாகும் கனவில் மூழ்கினார்கள். (நான் எல்லாம் எங்கள் அம்மாவிடம் அடம் பிடித்து பசு மாடு வாங்க சொல்லி அதற்கு லட்சுமி என்று பெயரும் வைத்து அதைப் பார்த்துக்கொண்டேன்)

    கதையில் கவனம்

    கதையில் கவனம்

    ரஜினிக்கு ரசிகர்கள் சேர்ந்ததற்கும் இன்னும் சூப்பர் ஸ்டாராக திகழ்வதற்கும் காரணம் இதுதான். திரையில் ரசிகன் ரஜினியை தனது பிம்பமாகப் பார்ப்பான். அங்கே ரஜினி ஜெயித்தால் தானே ஜெயித்தது போல... இதை வைத்தே தனது படங்களின் கதைகள் இருப்பது போலப் பார்த்துக்கொண்டார் ரஜினி. பாமர நடுத்தர மக்களிடம் இருந்து தனது கேரக்டர்கள் தாண்டி விடக்கூடாது, அந்நியப்பட்டு விடக்கூடாது என்பதில் ரஜினிக்கு எப்போதுமே கவனம் உண்டு.

    ஒவ்வொருவர் வாழ்விலும்

    ஒவ்வொருவர் வாழ்விலும்

    நட்பு, காதல், துரோகம், வஞ்சகம், சபதம், முன்னேற்றம் என்ற அண்ணாமலை காட்சிகள் எல்லாம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்தவைதான்...

    'துரோகியக் கூட மன்னிச்சிடலாம்... ஆனால் நண்பன் துரோகியாகிட்டா அவனை மன்னிக்கவே கூடாது' - ரஜினியின் இந்த பஞ்ச் எவர்கிரீன்!

    தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கை

    ஒவ்வொரு படத்திலும் தன் கேரக்டர் எத்தனை பெரிய பணக்காரராக, அதிகாரியாக இருந்தாலும் சில காட்சியாவது தன்னை அடிமட்டத்தில் ஒருவனாக காண்பித்திருப்பார். இது கிட்டத்தட்ட ஒரு தன்னம்பிக்கை பேச்சுக்கு ஒப்பானது. நீங்கள் ஒருவனை உட்கார வைத்து எத்தனை மணி நேரம் போதித்து பாருங்கள். இன்னொரு பக்கம் ரஜினி படங்களின் முன்னேற்ற காட்சிகளை சில நிமிடங்கள் காட்டுங்கள். இரண்டில் எதற்கு பவர் அதிகம் என்று புரியும். அண்ணாமலை அதற்கு சிறந்த உதாரணம்.

    பாட்ஷாவுக்கு அடித்தளம்

    பாட்ஷாவுக்கு அடித்தளம்

    அண்ணாமலையில் ரஜினி காட்டிய ட்ரான்ஸ்ஃபர்மேஷன்தான் பாட்ஷாவுக்கு அடித்தளம் என்று சொல்லலாம். ரஜினி விரலை நீட்டினால் விஷ்க் என்ற சத்தமும் அரங்கில் ரசிகர்கள் சத்தமும் வரத் தொடங்கியது அண்ணாமலையில் இருந்துதான்...

    அண்ணாமலையை யாராலும் தொடவோ, மிஞ்சவோ முடியாது. ஆசைப்படும் விஜய்யே அதைத் தொட அஞ்சுகிறார். அண்ணாமலையின் இயக்குநரே அதை ரீமேக் செய்து அதில் தோற்றும் விட்டார். அதன் பலம் ரஜினி மட்டும்தான்!

    ஒவ்வொரு ரசிகனும் திரையில் தன்னையே ரஜினியாக பார்க்கிறான். ரஜினி ஒவ்வொரு ரசிகனிடத்திலும் தன்னையே பார்க்கிறார். இந்தப் பிணைப்பு என்றும் மாறாதது.

    - ஆர்ஜி

    English summary
    Today Rajinikanth's blockbuster Annamalai is celebrating its 25th anniversary.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X