twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரிச்சலுகைக்காக சகலகலா வல்லவனான அப்பாடக்கர்.. அப்போ அப்பாடக்கர் எந்த நாட்டு பாஷை பாஸ்?

    By Veera Kumar
    |

    சென்னை: அப்பாடக்கர் என்பது தமிழ் வார்த்தையில்லை என்று நினைத்து, அப்படி பெயர் வைத்த திரைப்படம் சகலகலா வல்லவன் என்று பெயர் மாற்றி ரிலீஸ் ஆகியுள்ளது. அப்படியானால் அப்பாடக்கர் என்பது எந்த நாட்டு மொழி என்பதை படக்குழுவினர்தான் இந்த தமிழ் கூறும் நல் உலகிற்கு விளக்க வேண்டும்.

    சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, விவேக், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'அப்பாடக்கர்'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

    பெயர் மாற்றம்

    பெயர் மாற்றம்

    ஆனால் ரிலீசுக்கு முன்பாக திடீரென படத்திற்கு ‘சகலகலா வல்லவன்'னு இன்னொரு பெயரும் சூட்டி விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. விசாரித்தபோது, அனைவரும் யூகி்த்ததை போலவே, வரி விலக்குக்காக இந்த புதுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியவந்தது

    எந்த நாட்டு பாஷை

    எந்த நாட்டு பாஷை

    தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு கிடைக்கும் என்பது உண்மை. ஆனால், அப்பாடக்கர் தமிழ் பெயர் இல்லை என்று படக்குழுவின் ஆழ்மனதில் புகுந்து நம்ப வைத்தது யார் என்பதே இப்போது தொக்கி நிற்கும் கேள்வி. அப்பாடக்கர் என்ற வார்த்தை கொஞ்சம் அன்னியமாக தெரிகிறதே.. அதனால் இது தமிழில் இல்லை என்று யாராவது சந்தேகம் தெரிவித்தால், அப்பாடக்கர் எந்த நாட்டு பாஷை என்பதை கண்டறிந்து சொல்வதும் அவர்கள் பணியே.

    தலைநகர் தமிழ்தான்

    தலைநகர் தமிழ்தான்

    உண்மையில் சொல்ல வேண்டுமானால், அது தமிழகத்தின் தலைநகர் சென்னையிலுள்ள ஒரு வட்டார வழக்கு சொல். அவ்வளவுதான். வேறு எந்த நாட்டு மொழியிலும் அப்பாடக்கர் என்ற வார்த்தை பிரயோகம் கிடையாது. எனில், இந்த குழப்பத்தை யார்தான் தீர்ப்பது. இக்குழப்பம் பல காலமாக நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

    எம்டன் மகன் பெயர் மாறியது

    எம்டன் மகன் பெயர் மாறியது

    உதாரணம் இதோ: எம்டன் என்பது ஜெர்மனிய போர்க்கப்பலின் பெயர். முதல் உலகப்போரில் சென்னையில் குண்டு வீசப்பட்டதால், அந்த கப்பல் பெயர் தமிழ்நாட்டில் பிரபலமானது. வில்லங்கமான ஆட்களை குறிப்பிடுதற்கு அவன் பெரிய எம்டன் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எம்டன்=எத்தன். இந்த உண்மை தெரியாமல், வரிச் சலுகை பெறுவதற்காக எம்டன் மகன் என்ற படத்தின் பெயரை எம் மகன் என்று மாற்றிய சம்பவமும் இதே கோலிவுட்டில்தான் நடந்தது.

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

    அப்படியானால் டைட்டானிக் படத்தின் பெயரை தமிழில் அரக்கன் என வைத்து வரி சலுகை பெறலாமா. டைட்டானிக் என்பது எல்லா பாஷையும் டைட்டானிக்தான். ஆப்ரகாம் லிங்கன் எல்லா ஊரிலும் ஆப்ரகாம் லிங்கன்தான். ஆப்ரகாம் லிங்கனை பற்றி படம் எடுக்கும்போது, அவரது பெயரை வைத்தால் வரிச்சலுகை மறுக்க முடியுமா.. என்ன அளவுகோல் அடிப்படையில் வரிச்சலுகை தரப்படுகிறது என்பதை யாராவது விளக்கினால் புண்ணியமா போகும்.

    English summary
    The film name Appadakkar is changes as Sakalakala vallavan for getting tax exemption. If Appadakkar is not a Tamil word then anybody clarifies which language that word belonging to.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X