» 

ஆப்பிளின் ‘பெஸ்ட் ஆப் 2013’: சிறந்த தமிழ் ஆல்பமாக மரியான் தேர்வு

Posted by:

சென்னை: 2014ம் ஆண்டு பிறக்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், 2013ம் ஆண்டில் வெளிவந்த தமிழின் சிறந்த ஆல்பமாக மரியானை தேர்வு செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தாண்டு நடந்த சிறந்தவைகள் மற்றும், மறக்க இயலாத முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவது வழக்கமே. அந்தவகையில் பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது 2013ம் ஆண்டு தொகுப்பை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழின் மிகச் சிறந்த ஆல்பமாக மரியான் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

மரியான்....

2013ல் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் மரியான்.

தனுஷ் நடிப்பில்....

இத்திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக பார்வதி மேனன் நடித்திருந்தார். ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

காதலும், போராட்டமும்...

சூடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட இத்திரைப்படத்தில் காதலையும் கலந்து பரிமாறியிருந்தார்கள்.

சிறந்த பாடல்கள்...

தற்போது 2013ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல்களின் தொகுப்பாக இப்படத்தை தேர்வு செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

See next photo feature article

நன்றி...

இது குறித்து தகவலறிந்த இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், ‘2-13ம் ஆண்டின் தமிழின் சிறந்த ஆல்பமாக மரியானை தேர்வு செய்ததற்கும், அதற்கு காரணமான இப்படத்தின் பாடல்களை ரசித்துக் கேட்ட ரசிகர்களுக்கும் நன்றி' என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Read more about: mariyaan, ஆப்பிள், மரியான், தனுஷ், apple
English summary
Apple, one of the world’s most valued brands, has chosen Maryan as the Best Tamil Album of 2013.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos