»   »  தாயாருக்கு சிகிச்சை தந்த டாக்டர்களுக்கு ‘ஐ’ பட சிறப்பு காட்சி: ஏ.ஆர் ரஹ்மான் அசத்தல்

தாயாருக்கு சிகிச்சை தந்த டாக்டர்களுக்கு ‘ஐ’ பட சிறப்பு காட்சி: ஏ.ஆர் ரஹ்மான் அசத்தல்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அம்மாவை நல்ல முறையில் குணப்படுத்திய டாக்டர்கள், நர்ஸ்களுக்கு ‘ஐ' படத்தின் சிறப்பு காட்சிக்கு டிக்கெட் கொடுத்து அசத்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் உடல்நலமின்றி சமீபத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அம்மாவின் மீது அளவில்லாத பாசம் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் கூடவே இருந்து கவனித்துக் கொண்டாராம்.

நெகிழ்ந்த ரஹ்மான்

நெகிழ்ந்த ரஹ்மான்

மருத்துவமனையின் மருத்துவர்களும், நர்ஸ்களும், தனது தாயாரை நல்ல முறையில் கவனித்துக்கொண்டதை நேரில் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தாராம் ரஹ்மான்.

நேரடியாக நன்றி

நேரடியாக நன்றி

தனது தாயார் பூரண குணமடைந்ததற்கு அவருக்கு அளித்த திருப்தியான சிகிச்சைதான் காரணம் என்பதை புரிந்துகொண்டு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களிடம் நேரடியாக ஒவ்வொருவரிடம் சென்று நன்றி கூறினாராம் ரஹ்மான்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

தனது தாயார் நல்ல முறையில் குணமாகியதால் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தாராம். அவர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து திக்குமுக்காடச் செய்துவிட்டாராம்.

ஐ படத்திற்கு டிக்கெட்

ஐ படத்திற்கு டிக்கெட்

தான் இசையமைத்த 'ஐ' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனதை அடுத்து அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் ஆகியோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்து அனைவரையும் 'ஐ' படத்தை பார்க்க வைத்தார் ரஹ்மான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்மாவை காப்பாற்றியவர்களுக்கு ஐ படத்தை பார்க்க வைத்து அசத்திவிட்டார் ஏ.ஆர். ரஹ்மான்.

English summary
Double Oscar-winning composer A.R. Rahman offered tickets of his latest Tamil outing "I" to a group of doctors and their families of Apollo Hospital here as a token of gratitude for treating his mother when she was seriously ill.
Please Wait while comments are loading...