twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னை ஹீரோவாக காட்டாதீர்கள்.. தாவூத் இப்ராகிமின் எதிரி 'முன்னாள் மும்பை தாதா' அருண் காவ்லி!

    By Shankar
    |

    மும்பை : முன்னாள் மும்பை தாதா அருண் காவ்லியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'டேடி' என்ற படத்தில் அர்ஜுன் ராம்பால் நடித்து வருகிறார்.

    ஆஷிம் அலுவாலியா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை பற்றி அர்ஜூன் ராம்பால் சமீபத்தில் பேசியிருந்தார். அருண் காவ்லியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் படத்தில் இடம்பெறுவதாகவும் கூறினார்.

    Arun Gawli asks not to portray him as hero

    முன்னதாக அருண் காவ்லி பரோலில் வெளி வந்திருந்த போது அவரை அர்ஜூன் ராம்பால் சந்தித்து பேசியுள்ளார்.

    அப்போது அருண் காவ்லி, உள்ளதை உள்ளபடி படத்தில் காட்டுங்கள். என்னை ஹீரோவாக சித்தரிக்கத் தேவையில்லை என்று சொன்னாராம்.

    இந்த கதை என்னுடையது மட்டுமல்ல. இந்த நாட்டில் அனேகம் பேருடையது. பிழைப்புக்காக எந்த அளவுக்கும் செல்லத் தயங்காதவர்களின் கதை தான் இது.

    இந்த நாட்டின் சட்ட திட்டங்கள் மாற்றத்தை உருவாக்கும் வகையில் இருக்கிறதா?. அதை படத்தில் காட்டுங்கள் என்றும் அருண் காவ்லி கூறினாராம்.

    தாவுத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்து பின்னர் எதிரியான ராம் நாயக் அணியில் அருண் காவ்லி இருந்தார்.

    Arun Gawli asks not to portray him as hero

    போலிஸ் என்கவுண்டரில் ராம் நாயக் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அருண் காவ்லி அந்த கோஷ்டியின் தலைவரானார்.

    தாவுதின் கூட்டாளிகள் மும்பையை காலி செய்து துபாய்க்கு ஓடியதற்கு அருண் காவ்லியின் அட்ராசிட்டி தான் காரணமாக கருதப்பட்டது.

    தாவுத் இப்ராஹிமுக்கு கடும் சவாலாக இருந்த அருண் காவ்லி, பின்னர் அரசியல்வாதியாக மாறினார்.

    பால் தாக்கரே ஆதரவுடன் அரசியலுக்கு வந்தவர், பின்னர் அகில பாரதிய சேனா என்ற சொந்தக் கட்சியை தொடங்கினார். 2004 ஆம் ஆண்டு சின்ச்போக்லி தொகுதி எம்.எல்.ஏ வாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்

    சிவசேனா தலைவர் கமலாக்கர் கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    Arun Gawli asks not to portray him as hero

    அருண் காவ்லியின் மகள் மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ஜூலை மாதம் திரைக்கு வர உள்ள 'டேடி' படத்தில் தாவுத் இப்ராஹிமாக, ஃபரான் அக்தர் நடித்துள்ளார்.

    English summary
    Mumbai gangster turned politician Arun Gawli told not to portray him as hero. Arjun Rampal is acting in a movie named Daddy, based on true story of Arun Gawli, who was believed as reason for run away of Davood Ibrahim from Mumbai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X