» 

10 லட்சம் ஹிட் அடித்த ராஜா ராணி டிரெய்லர்

Posted by:

ஏ.ஆர். முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்யா- நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள படம் ராஜா ராணி.

படபூஜை அழைப்பிதழ் தொடங்கி கேசட் ரிலீஸ் வரை இந்த படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

ராஜா ராணி டிரைலர்

லவ் ஆஃப்டர் லவ் ஃபெயிலியர்

ராஜா ராணி திரைப்படத்தின் டிரெய்லர் திருமணத்தில் தொடங்குகிறது. ஜான், ரெஜினா வாக ஆர்யா - நயன்தாரா ஜோடி நடித்துள்ளனர். அறிமுகம் இல்லாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் , திருமணத்திற்கு பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை நகைச்சுவையுடன் கூறியுள்ளார் புதுமுக இயக்குநர் அட்லி. இவர் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

10 லட்சம் ஹிட்

கடந்த 22ம் தேதி சென்னையில் இப்படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது. 'யூ டியூப்' இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ராஜா ராணி டிரைலரை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

குறும்படம் போல

யுடியூப்பில் மட்டுமல்லாது சின்னத்திரையில் புரமோசனுக்காக விளம்பரம் செய்யப்படுகிறது ராஜா ராணி. படத்தின் டிரைலரே ஒரு குறும்படம் போல உள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

முதல் முறையாக

குறைந்த நாட்களில் ஒரு டிரைலரை இத்தனை பேர் பார்த்திருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஜெய்– நஸ்ரியா ஜோடி

ராஜா ராணியில் சத்யராஜ், ஜெய், நஸ்ரியா நசீம், சந்தானம் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது புது மணமக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் என்கிறார் இயக்குநர்.

திருமண விழா

இதில் ஆர்யா - நயன்தாராவின் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதாம். பட பூஜைக்காக ஆர்யா, நயன்தாரா மோதிரம் மாற்றிக் கொள்வது போல அழைப்பிதழ் அச்சடித்தனர். சில தினங்களுக்கு முன் ஆர்யா, நயன்தாரா திருமண போஸ்டர் நகரமெங்கும் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

See next photo feature article

ராஜா ராணி டிரைலர்

ராஜா ராணி டிரைலர்

Read more about: raja rani, arya, nayanthara, you tube, ஆர்யா, நயன்தாரா, ராஜா ராணி, யுடியூப்
English summary
The trailer of Raja Rani has created a rage on YouTube. Within 5 days the trailer has received more that 10 lakh hits.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos