»   »  "நயன்தாரா" எங்கிருந்தாலும் வாழ்க... பெருந்தன்மையுடன் வாழ்த்தும் "ஆர்யா"

"நயன்தாரா" எங்கிருந்தாலும் வாழ்க... பெருந்தன்மையுடன் வாழ்த்தும் "ஆர்யா"

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா எங்கிருந்தாலும் வாழ்க என்று பெருந்தன்மையுடன் அவரை மனப்பூர்வமாக வாழ்த்தியிருக்கிறார் நடிகர் ஆர்யா.

ஆர்யா, கிருஷ்ணா, தீபாசன்னதி, மற்றும் சுவாதி நடிப்பில் இன்று வெளியாகவிருக்கும் படம் யட்சன், இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இந்தப் படத்தின் மூலம் ஆர்யாவுடன் 5 வது முறையாக இணைந்திருக்கிறார்.

மிக சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் விஷ்ணுவர்த்தனுக்கும் தனக்குமிடையே இருக்கும் கெமிஸ்ட்ரி மற்றும் நயன்தாரா குறித்து பகிர்ந்து கொண்டார் நடிகர் ஆர்யா.

அறிந்தும் அறியாமலும்

அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவை அறிமுகப்படுத்தியவர் விஷ்ணுவர்தன் தொடர்ந்து பட்டியல், சர்வம், ஆரம்பம் என தொடங்கி யட்சன் வரையும் ஆர்யா இல்லாமல் விஷ்ணுவர்தன் படம் கிடையாது என்ற அளவுக்கு இவர்களின் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. யட்சன் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் விஷ்ணுவர்தனுடனான கூட்டணி பற்றியான ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டார் ஆர்யா.

விஷ்ணுவர்த்தன் நல்ல நண்பர்

"தொடர்ந்து விஷ்ணுவர்தன் படங்களில் நடிப்பதற்கு எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு தான் காரணம். ஆனால் படப்பிடிப்பின் போது நண்பன் எனபதைக் காட்டிக் கொள்ளாமல் இயக்குநராக மாறிவிடுவார்.

 

 

பட்டியல் படத்தின்போது

பட்டியல் படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் நான் பாலத்திலிருந்து ஆற்றில் குதிப்பது போன்ற ஒரு காட்சியில் நான் முதலில் தயங்கினேன். உடனே நான் வேண்டுமென்றால் குதித்துக் காட்டட்டுமா? என்று விஷ்ணுவர்தன் கேட்டார். அவர் கேட்ட அடுத்த நிமிடம் நானே குதித்தேன். அந்த அளவிற்கு சினிமாவில் மேல் பிரியம் கொண்டவர் விஷ்ணுவர்தன்"

தீபா சன்னிதிக்கு பிரியாணி

இந்தப் படத்தின் ஹீரோயின் தீபாசன்னதியைப் படப்பிடிப்பின் போது பேச வைத்ததே பெரியவிஷயம். இன்னும் அவர் பிரியாணி விருந்து சாப்பிடவில்லை என்று ஆர்யா கூறினார்.

நயன்தாரா வாழ்க

மேலும் "நயன்தாரா எங்கிருந்தாலும் வாழ்க, கண்டிப்பாக அவரின் திருமணத்தில் நான் கலந்துகொள்வேன் என்று பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார்.

காதல் கல்யாணம்

ஆர்யாவின் திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது "காதல் திருமணம் தான் செய்துகொள்ளப்போகிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்துல நயன்தாரா மாதிரி ஒரு பொண்ணு வேணும்னு அடம்பிடிச்சிங்களே ஆர்யா....

 

English summary
Yatchan Press Meet - Arya Talks About Nayanthara and Vishnu Vardhan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos